தவில் நாதஸ்வர இசைக் கச்சேரியும் , கலைஞர்கள் கௌரவிப்பு விழாவும்.

பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் முன்னெடுக்கும் மற்றுமொரு இசைக் கச்சேரி விழா எதிர் வரும் சனிக்கிழமை மாலை (20/09/2014) 04:30 தொடக்கம் 08:30 வரை, Kingsbury High School, (In Upper School Hall), Princes Avenue, Kingsbury, London NW9 9JR  எனும் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

 

காரைநகரில் இருந்து வருகை தந்திருக்கும் காரையெம்பதி தவில் வித்துவான் வீராச்சாமியின் புதல்வன் தவில் வித்துவான் கண்ணன், காரையெம்பதி நாதஸ்வர வித்துவான் மறைந்த கணேசன் அவர்களின் புதல்வன் தவில் வித்துவான் செந்தூரன் , மற்றும் நாதஸ்வர வித்துவான் யாழ் கார்த்தீபன் (நாதஸ்வர வித்துவான் நாகதீபன் அவர்களின் தம்பி), நாதஸ்வர வித்துவான் மணிகண்டன் ஆகியோரின் இசைக் கச்சேரியும், இவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெறும்.
அனைவரையும் தவறாது கலந்தது கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தினர்.
அனுமதி £5 மட்டுமே.
தொடர்புகளுக்கு:- குமார்:-  07951 950843 , சுந்தரதாசன் : 07969 872383.