In October 2013, KWS-UK sponsored the fourth round of cataract surgery carried out in Moolai hospital. Eighteen Karainagar people were registered with Karai Abiviruththi Sabai. All eighteen people were eye examined by Dr S.Kugathasan and his team and have conducted cataract surgery to ten people and two people including a child were referred to Jaffna Teaching Hospital due to other health issues. Other six people do not require eye surgery.

 

Total cost for this works was approximately £1000. Karai Welfare Society- UK would like to continue this project work year on year.

 

பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன் நாலாம் கட்ட கண்படர்(Cataract ) அகற்றல் சிகிச்சை 10 பேருக்கு நிறைவுற்றது..

 

பிருத்தானிய காரை நலன் புரிச் சங்கத்தினரால் வருடா வருடம் மேற்கொள்ளப்பட்டு வரும் மருத்துவ உதவித் திட்டத்தின் கீழ் கடந்த 22/10/2013 அன்று, நான்காம்  கட்டமாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 10 பேர்களுக்கு கண்படர் அகற்றல் சிகிச்சை மூளாய் வைத்தியசாலையில் Dr .S.குகதாசன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இம் நாலாம் கட்ட இலவச  கண்படர் அகற்றல் சிகிச்சைக்கு சுமார் 18பேர்கள் வரையில் காரை அபிவிருத்தி சபை அலுவலகத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். பின்னர் இவர்கள் அனைவரும் மூளாய் வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர். இவர்களில் 10 பேர்கள்  உடனடி சிகிச்சைக்கு உட்படுத்தபட்டனர். மற்றும் இருவர் இந்த கண்படர் நோயினால் பாதிக்கப் பட்டிருந்த போதிலும் அவர்களது உடல் நலம் கருதி யாழ் போதன வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேற்படி சிகிச்சைகளுக்கான உதவித் தொகையாக ரூபாய் 193,000.00(ஒரு இலட்சத்து தொன்நூற்று மூவாயிரம் ரூபாய்) பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தினரால் வழங்கப்படுள்ளது.

கடந்த வருடங்களில் முதல் தடவையாக 17பேர்களுக்கும் , இரண்டாம் தடவையாக 15பேர்களுக்கும், மூன்றாம் தடவையாக(28/02/2013) 13 பேர்களுக்கும்   இவ் கண்படர் அகற்றல் சிகிச்சை எமது சங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இம் முறை நான்காம் தடவையாக சிகிச்சை வழங்கப்பட்ட 10பேர்களது பெயர் விபரமும், பரிசோதிக்கப்பட்ட 18பேர்களின் விபரமும் இங்கு பதிவாகி உள்ளதுடன்  அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இங்கே இணைத்துள்ளோம்.

இச்சிகிச்சையை திறம்பட ஒழுங்கமைத்து நடாத்தி முடித்த எமது காரை அபிவிருத்தி சபை நிர்வாக உறுப்பினர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றோர் விபரம்….

 

1.  திரு.A . தெய்வேந்திரன்

2.  திரு.S .நடராஜா

3.  திரு.N .கோடிஸ்வரன்

4.  திரு.K . சிவலிங்கம்

5.  திருமதி. P .சின்னம்மா

6.  திருமதி. S . பராசக்தி

7.  திருமதி.A .நல்லம்மா

8.  திருமதி. A . தங்கேஸ்வரி

9.  திருமதி. C . பொன்னம்மா

10.திருமதி. A .வள்ளிநாயகி

 

11. திரு. M . கந்தசாமி

12. திரு. S . சிவலிங்கம்

13. திரு. V . கருணைலிங்கம்

14. திருமதி. M . சின்னக்கிளி

15. திருமதி. M . மயில்வாகனம்

16. திருமதி. R .சரஸ்வதி

17. திருமதி. T . வள்ளியம்மை

18. செல்வன். S . சனுஜன்

 

மேற்குறிப்பிட்டுள்ளோரில் முதல் 10 பேர்களும் சிகிச்சை பெற்றவர்கள் ஆவார்கள்.

 

ஐந்தாம் கட்ட சிகிச்சை 2014 பெப்ரவரி மாத இறுதிப் பகுதியில் ஆரம்பமாகும்.

நன்றி .

பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்.