ad 16 11 2025

தெற்கு லண்டன் வாழ் காரைநகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப, இந்த முறை காரை கதம்பம், தெற்கு லண்டன் பகுதியில் நடக்க இருக்கிறது.


அன்பின் பிரித்தானியா வாழ் காரை மக்களே,

 
எமது வருடாந்த பொங்கல் விழாவான காரை கதம்பம் 2026 நெருங்கி வருவது யாவரும் அறிந்ததே.
 
தங்கள் பிள்ளைகளின் கலை, கலாச்சார திறமைகளை காரை மக்களின் முன்னால் வெளிப்படுத்த எமது சங்கம் அமைத்துக்கொடுக்கும் மேடை இது.
 
உங்கள் பிள்ளைக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
 
எமது ஊரின், எமது நாட்டின், எமது இனத்தின் கலை, கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது அதுவும் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களுக்கு கடத்துவது, தங்களின் தலையாய கடமை.
 
அதற்கான மேடையே, எமது காரை கதம்பம் 2026. 
 
உங்கள் பிள்ளையை தயார்படுத்தி, உங்களுக்கான மேடையில் மேடையேற்ற தயாராகுங்கள்.
 
விண்ணப்ப படிவம், இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
 
 

விண்ணப்ப முடிவு திகதி : 31/01/2026

———————————————————————————————————————————————————————————————————————————————————————-

காரை கதம்பம் 2026
நிகழ்சிகள் பற்றிய அறிவிப்புக்கள்

வழமைபோல் எமது சங்க அங்கத்தவர்களின் பிள்ளைகள்தான் நிகழ்சிகள் செய்யலாம்.
அங்கத்தவர்கள் அல்லாதவர்கள் உங்களின் அங்கத்துவத்தை நிர்வாகத்தினருடன் பேசி உறுதிசெய்யுங்கள்.

நுழைவுக்கட்டணமாக 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, 5 பவுன்ஸ் அறவிடப்படும்.

நிகழ்வு செய்யும் ஒவ்வொருவரும் 10 பவுன்ஸ் அனுமதிக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

எமது நிகழ்சிகள் மெருகூட்டப்பட்டு இருக்கின்றன.

இறைவணக்கத்தின் பின்னர் எமது சிறார்களின் நிகழ்வுகள் நடைபெறும்.

இடையிடையே, எமது நிகழ்வில் பார்வையாளர்களாக இருப்பவர்களையும், உள்ளெடுத்து, விவாத நிகழ்வுகள் இடம்பெறும்.

எமது பிரதம விருந்தினராக ……………………………. அவர்கள் எமது விழாவினை அலங்கரிப்பார்கள்.

இவை யாவும் உங்களுக்காக, எனவே தவறாது 14.02.2026 அன்று எமது விழாவிற்கு 5 மணிக்கு முன்பே வந்து, கண்டு கழிக்குமாறு அனைத்து காரைநகர் மக்களையும் அழைக்கிறோம்.

நன்றி
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்