அன்பின் புலத்திலும், புலம்பெயர் வாழ்விலும் உறவாடும் காரை மக்களே,


காரைநகர் என எமது ஊருக்கு பெயர் மாற்றி நூறு ஆண்டுகள் கழிந்து விட்டது.!!

ஆம் நாம் காரைநகர் எனும் பெயருடன் நூறாவது தீபத்திருநாளை கொண்டாட உங்கள் அனைவரின் அனுசரணையுடன் இந்த மாபெ௫ம் “காரை நூற்றின் தீபத்தி௫நாளை “ முன்னெடுக்கின்றோம்.

காரைநகர் என்று இன்று அழைக்கப்படும் இந்த ஊர் மக்கள், தமது ஊரினை ஊர்மக்கள் தாங்கள் முன்னேறிய அளவு முன்னேற்றி விட்டார்களா என்பது எல்லோர் மனதிலும் உள்ள பெரிய கேள்வி.

காரைநகர் எனும்பெயருடன் நூறாவது தீபத்திருநாளை கொண்டாடும் இந்த வேளையில், மொத்த ஊரும் சேர்ந்து இது பற்றி பேசலாமே என, எமது சங்க நிர்வாகம் சிந்தித்து, ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

அதாவது

“காரை நூற்றின் தீபத்திருநாள்”

எனும் விழாவை நடாத்த முடிவு செய்துள்ளது. 

திகதி : 19 – 11 – 2023
நேரம் : காலை 11 மணி (பிரித்தானிய நேரம்)

தொடர்பு முறை : (இணைப்பு விபரங்கள் மிக விரைவில் பகிரப்படும்)



கீழ்வரும் Youtube channel உடன் இணைந்திருங்கள். Zoom மூலம் நடக்கும் மாநாட்டை Youtube இல் நீங்கள் இலகுவாக காணலாம்.

காரை நலன்புரி சங்கம், பிரித்தானியா

https://www.youtube.com/@user-hq7cu5jz6i


இந்த விழாவில் உலகெங்கும் பரவி வாழும் காரைநகர் மக்கள் அனைவரையும் இணைக்க முயற்சி செய்கிறோம். இதற்கு இன்றைய நவீன தொழில்நுட்பம் எமக்கு உதவி செய்யவிருக்கிறது. உலகில் எந்த மூலையில் இருந்தாலும், இந்த நிகழ்வில் இலவசமாக இணைந்து கொள்ளலாம். அதுவும் வீட்டில் இருந்துகொண்டே காணலாம்.

 

நீங்கள் நேரத்தை ஒதுக்கி வைத்திருந்தால் மட்டும் போதும்.


எம்போன்ற காரைநகரை மேம்படுத்தவேண்டும் எனும் நோக்கில் உலகெங்கும் இயங்கும் அனைத்து அமைப்புகளையும் எமது பங்காளர்களாக இணைத்துக்கொண்டு இந்த விழாவை நடாத்த இருக்கிறோம்.

கீழ்வரும் அமைப்புகள், மற்றும் புத்திஜீவிகள் மற்றும் கல்விமான்களை அழைக்க இருக்கிறோம்

+ பிரான்ஸ் காரை நலன்புரிச்சங்கம்
+ சுவிஸ் காரை அபிவிருத்தி சபை
+ கனடா காரை கலாச்சார மன்றம்
+ மலேசியா காரை நலன்புரிச்சங்கம்
+ அவுஸ்ரேலிய காரை நலன்புரிச்சங்கம்
+ ஜெர்மன் காரை நலன்புரிச்சங்கம்
+ காரை இந்து பழைய மாணவர் சங்கம் – கொழும்பு
+ காரை இந்து பழைய மாணவர் சங்கம் – கனடா
+ யாழ்ரன் பழைய மாணவர் சங்கம் – பிரித்தானியா
+ பிரித்தானியா களபூமி ஒன்றியம்
+ சக்தி இலவச கல்வி நிலையம் – பிரித்தானியா

+காரைநகர் அபிவிருத்தி சபை 

==> மேலும் அமைப்புக்கள் சேர்க்கப்பட்ட இருப்பின் எமக்கு அறியத்தாருங்கள்

 


எல்லோரும் கூடிப்பேசுவோம்.

காரைநகர் பற்றி எமக்கு தேவையான அறிவையும், தரவுகளையும் பகிர்ந்து கொள்வோம். அவற்றை வைத்து கூட்டாகவோ, தனித்தனியாகவோ காரைநகருக்கு என்ன தேவையோ அதை செய்வோம்.

காரைநகர்

=> நடந்து வந்த பாதை

=> இன்றிருக்கும் நிலை 

= > இனிமேல் என்ன செய்ய வேண்டும் 

என்பவற்றை கூடிப்பேச இருக்கிறோம்.

 

பின்வரும் தலைப்புகளில் பேச இருக்கிறோம்

=> கல்வி
=> மருத்துவம்
=> பொருளாதாரம்
=> நீர் முகாமைத்துவம்

=> விவசாயம்
=> கலாச்சார விழுமியங்கள்
=> சமுதாய கட்டமைப்பு
=> வரலாறு 

 

கல்விமான்களும், புத்திஜீவிகளும், சமூக செயற்பாட்டாளர்களையும் அழைத்து காரைநகர் மக்கள் முன் பேச விட இருக்கிறோம்.

இந்த செய்தியை காரைநகர் மக்களிடையே பரப்புங்கள்


குறிப்பு :
காரைநகருக்கு என்ன செய்யவேண்டும் என சிறந்த செயல்திட்டத்தை முன்மொழிய விரும்புவார்கள், தங்கள் செயல்திட்டத்தை 5 – 7 நிமிடங்களுக்குள் முன்மொழியக்கூடியவாறு தயாரித்து (31.10.2023 இற்கு முன் )எமக்கு அனுப்பி வையுங்கள். தெரிவு செய்யப்பட்ட சிறந்த செயல்திட்டங்களை விழாவின்போது, தாங்களே முன்மொழிய எம்மால் நேரம் ஒதுக்கித்தரப்படும்.

 


மேலதிக விபரங்கள் இங்கேயே இணைக்கப்படும். காத்திருங்கள். நன்றி