தடைகள் வருவது இயல்பு, அதேபோல் தடைகள் தாண்டி இலக்கை அடைவதோ எமது இயல்பு

சூழ்நிலைக்காரணங்கள் பல தடைகளை ஏற்படுத்தினாலும், சங்கமம் நடத்தியே ஆகவேண்டும் என்பது சங்கத்தின் கடமை. அதுவும் சங்க பொதுநிதியில் கைவைக்காமல் நடாத்தவேண்டும் என்பது சங்கத்தின் சட்டம்.

அதற்கமைய கச்சித்தனமான திட்டமிடல்களுடன், குறைந்தளவு வளங்களுடன், சிறப்பாக சங்கமம் நடந்தேறியது.

வருகை தந்தவர்கள் எமது சங்கம நிகழ்வுகளினால் மகிழ்ந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்திச் சென்றனர் என்பதில் எல்லோருக்கும் மகிழவே.

இந்த முறை சங்கமத்தில் வராதவர்கள் வந்திருந்தார்கள், புதியவர்கள் வந்திருந்தார்கள். சங்கமத்தை தவறவிடாத வாடிக்கையான விளையாட்டிலும், காரைநகர் மீதும் பற்றானவர்களும் வந்திருந்தார்கள்.

எமது மனமார்ந்த நன்றிகளை
1. வருகை தந்திருந்த அனைத்து காரைநகர் மக்களுக்கும்
2. தமது ஆத்மார்ந்த உழைப்பை வழங்கிய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பிற காரைநகர் மக்களுக்கும்
3. குறிப்பாக கடினமாக உழைத்த இளையவர்களுக்கும்
4. எமது சங்க சங்கமத்திற்கான அனுசரணையாளர்களுக்கும்
5. சேவை வழங்குநர்களுக்கும்
6. வேறு நன்றி கூறப்படவேண்டியவர்கள் எவராவது இங்கே தவறவிடப்பட்டிருந்தாலும்
தெரிவித்துக்கொள்கிறோம்.

 


அனுசரணை :

மைதானம் – Everyday குடும்பம்

முதலாம் பரிசு – KKV குலரத்தினம் நினைவாக

IPOSG


எமது நிகழ்வுகளின் நிழல்கள் இங்கே காணொளியாக இணைக்கப்பட்டுள்ளது.