அன்பான எமது சங்க அங்கத்தவர்களுக்கு, 

 

எமது சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 25.09.2021 அன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அவைத்தலைவர், செயலாளர், மற்றும் பொருளாளர் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு அங்கத்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

 

அடுத்தகட்டமாக புதிய அறங்காவலர் சபை தெரிவினை எமது சங்கத்தின் யாப்பு மற்றும் நிர்வாகசபை முடிவுகளுக்கு ஏற்ப நடாத்த முடியாத நிலமை கூட்டத்தில் சிலரால் தோற்றுவிக்கப்பட்டது. 

 

இந்த குழப்ப நிலமை சங்கத்தின் அவைத்தலைவர் மற்றும், அவரால் அழைத்து வரப்பட்டவர்களாலேயே உருவாக்கப்பட்டது. சங்கத்தின் அறங்காவலர்கள் நிலமையை சமாளித்து புதிய அறங்காவலர் சபை தெரிவை சங்க யாப்பிற்கு அமைவாக நடாத்த முயன்றும் முடியாமல் போனது. 

 

எனவே பெரும்பான்மை அறங்காவலர்களும், பெரும்பாலான அங்கத்தவர்களும் கூட்டத்தில் எதிர்ப்பை தெரிவித்து வெளிநடப்பு செய்து வெளியேறினார்கள். அதனால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. ஒத்திவைப்பை அறிவித்துவிட்டு செயலாளரும் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். 

 

இருந்தும் எமது யாப்பு விதிமுறைகளையும், நிர்வாக முடிவுகளையும் மீறி நிர்வாக சபையொன்று உருவாக்கப்பட்டதாக தகவல் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. அப்படி எந்தவித சபையும் உருவாக்கப்படவில்லை என்பதனை அறங்காவலர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். 

 

ஒத்திவைக்கப்பட்ட அறங்காவலர் சபை தெரிவு வெகுவிரைவில் ஒரு விசேட பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு நடைபெறும் என்பதனை தங்களுக்கு தெரிவித்து  கொள்கிறோம். 

 

நன்றி 

 

அறங்காவலர்கள் 

 

  1. பொன்னையா ஞானாந்தன் 
  2. தில்லைநடராஜா சண்முகநாதன் 
  3. ஜீவகாந்தன் நடராஜா 
  4. தர்சன் இராஜேந்திரன்