அன்பின் பிரித்தானிய காரை நலன்புரிச்சங்க அங்கத்தவர்களே,


எமது வருடாந்த பொதுக்கூட்டம் தொடர்பாக, எம்மால் தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை மீண்டும் இங்கே இணைக்கிறோம்.எமது சங்கத்தின் யாப்பில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் (14.08.2021 திகதியிடப்பட்ட எமது கடிதத்திற்கு அமைவாக) மற்றும் பழைய யாப்பின் ஏற்பாடுகள் என்பன இந்த வருடாந்த பொதுக்கூட்டத்தில் முறையாக நடைமுறைப்படுத்தப்படும்.


முக்கியமான ஒழுங்கு நடவடிக்கைகளை இவ்விடத்தில் விபரித்து அங்கத்தவர்களின் குழப்பத்தை தவிர்க்க முயல்கிறோம்.

  • 29.08.2021 முன் தமது அங்கத்துவத்தை உறுதி செய்தவர்கள் மட்டுமே இந்த வருடாந்த பொதுக்கூட்டத்தில் பங்குபற்ற முடியும். தங்கள் அங்கத்துவத்தை உறுதிப்படுத்த தங்களுக்கு அங்கத்துவ இலக்கம் தரப்பட்டு இருக்கும். மேலும் தங்களுக்கு வருடாந்த பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் எம்மால் அனுப்பப்பட்டு தங்கள் அங்கத்துவத்தை உறுதிப்படுத்தி இருப்போம். யாராவது அங்கத்துவ பணம் செலுத்தியிருந்தும் தங்களுக்கு அழைப்பிதழ் வரவில்லையாயின் உடனடியாக info@karainagar.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு உரிய விபரங்களுடன் தொடர்பு கொள்க.

  • மேலும் நீங்கள் அங்கத்தவர் என்பதை உறுதிப்படுத்த, தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்துடன் வருகைதந்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  • தாங்கள் அறங்காவலாராக இந்த சங்கத்தில் இணைந்து பணியாற்ற விருப்பினால் அதற்கான தகுதிகளை நிறைவு செய்து, அன்றைய தினம் சமூகமளித்திருக்கும் அங்கத்தவர்களால் தெரிவு செய்யப்படவேண்டும்.

அறங்காவலருக்கான தகுதிகள் பின்வருமாறு1) விண்ணப்பதாரி 26.09.2020 இற்கு முன்பிருந்தே, எமது சங்க அங்கத்தவத்தை பெற்றிருக்க வேண்டும்.


2) தங்களை ஒரு அறங்காவலராக Charity Commission (UK) இல் பதிவு செய்ய, அறங்காவலர் பத்திரத்தை பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு தெரிவுக்குழுவிடம் சமர்ப்பித்திருக்க வேண்டும்.


3) அறங்காவலருக்கான விண்ணப்படிவத்தை 18.09.2021 இற்கு முன்னர் elect4kws@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 18.09.2021 இற்கு முன்னர் elect4kws@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தெரிவுக்குழுவால் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.


4) ஒரு அங்கத்தவர் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


5) உரிய விண்ணப்ப படிவத்தை சமர்பித்தவர்கள் மட்டுமே தெரிவு செய்யப்படுவார்கள்.


அறங்காவலர் பதவிக்கான விண்ணப்படிவம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

அறங்காவலர் படிவம் (Trustee Form) இங்கே இணைக்கப்பட்டுள்ளது.


  • தெரிவுக்குழு என்பது ஒரு போசகரையும், ஒரு தன்னார்வல அங்கத்தவரையும் கொண்ட இருநபர் ஆணையம் ஆகும். அவர்களை elect4kws@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

  • தேவைப்படுமிடத்து இரகசிய வாக்கெடுப்பு முறைமை அமுல்படுத்தப்படும்.

மேலதிக தகவல்களுக்கு எம்மை info@karainagar.org எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்க.


எமது சங்கத்தின் வருடாந்த கூட்டத்தை அமைதியாகவும், முறையாகவும் நடாத்த தங்களின் பூரண ஒத்துழைப்பு அவசியம்.


நன்றி


செயலாளர்

காரை நலன்புரிச்சங்கம்,

பிரித்தானியா