எமது சங்கத்தின் வருடாந்த காரை கதம்பம் வழமைபோல் இம்முறையும் சிறப்பாக இடம்பெற இருக்கிறது. இம்முறை விசேடமாக காரைநகர் நூற்றாண்டு மலரும் வெளியிடப்பட இருக்கிறது.

எமது காரை கதம்பம் 2024 நிகழ்வானது வரும் சித்திரை 13 (13 – 04 – 2024), அன்று இடம்பெற இருக்கிறது.

 

காரை கதம்பம் 2023 காட்சிகள்

எமது ஊரின் நூற்றாண்டின் மலர் வெளியீட்டிற்கு எம்போன்ற காரைநகரை மேம்படுத்தவேண்டும் எனும் நோக்கில் உலகெங்கும் இயங்கும் அனைத்து அமைப்புகளையும் எமது பங்காளர்களாக இணைத்துக்கொண்டு இந்த விழாவை நடாத்த இருக்கிறோம்.

காரைநகர் பற்றி எமக்கு தேவையான அறிவையும், தரவுகளையும் பகிர்ந்து கொள்வோம். அவற்றை வைத்து கூட்டாகவோ, தனித்தனியாகவோ காரைநகருக்கு என்ன தேவையோ அதை செய்வோம்.

காரைநகர்

 • => நடந்து வந்த பாதை
 • => இன்றிருக்கும் நிலை
 • = > இனிமேல் என்ன செய்ய வேண்டும் 

என்பவற்றை விரிவாக ஆராய்ந்து எழுத்தில் வடிக்க உள்ளோம்.

பின்வரும் தலைப்புகளில் ஆராய இருக்கிறோம்

 • => கல்வி
 • => மருத்துவம்
 • => பொருளாதாரம்
 • => நீர் முகாமைத்துவம்
 • => விவசாயம்
 • => கலாச்சார விழுமியங்கள்
 • => சமுதாய கட்டமைப்பு
 • => வரலாறு 

 


குறிப்பு :
காரைநகர் எப்படி இருந்தது, அடுத்து என்ன செய்யவேண்டும் என வரலாறுகளையும், எதிர்காலத்தையும் எழுத்தில் வடிக்க விரும்புவோர், தங்கள் ஆக்கம் மற்றும் எதிர்கால திட்டங்களுடன் எமது மின்னஞ்சல் “karai100kws@gmail.com” எனும் முகவரிக்கு 15 – 03 – 2024 இற்கு முன்னர் தொடர்பு கொள்ளுங்கள். தெரிவு செய்யப்படும் சிறந்த ஆக்கம் எமது நூற்றாண்டு மலரில் இடம்பெறும்.

 


பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம் பெருமையுடன் முன்னெடுக்கும்

காரை நூற்றாண்டு மலர் 2024 வெளியீடு.

1923 க்கு முன்னர் காரைதீவாக விளங்கிய எமது ஊர், காரைநகர் எனும் நாமம் பெற்று ஒரு யுகத்தை கடந்துள்ளமையை வரலாறு ரீதியாக ஆவணப்படுத்து முகமாக இம்மலர் வெளிவருகின்றது.

உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் எமது ஊர் மக்களிடம் இருந்து இம்மலருக்கான எமது ஊர்பற்றிய வரலாறு சம்பந்தமான ஆக்கங்கள், புகைப்படங்கள், வரைபட கட்டுரைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இம்மலருக்கான உங்கள் ஆக்கங்களை வரும் 15 /03 /2024 க்கு முன்பதாக karai100kws@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்.

மேலும் இம்மலருக்கு உலகெங்கும் பரந்து விளங்கும் எமது ஊர் வர்த்தக பெருமக்களின் விளம்பரங்களும் இணைக்கப்படவுள்ளன.

விரும்பிய வர்த்தக பிரமுகர்கள் தங்கள் நிறுவன விளம்பரங்களை இம்மலரில் பிரசுரிக்கலாம். இந்த மலர் இன்னொரு யுகத்தை தாண்டும்போது அன்றைய தலைமுறை ” காகம் பறக்காத ஊருமில்லை, காரைதீவான் போகாத இடமுமில்லை” என்பதன் உட்பொருளை பார்த்து வியப்படைவார்கள்.

வர்த்தக விளம்பரத்திற்கான உதவித்தொகை விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1 . A4 முழுப்பக்க விளம்பரம் — £200 .00

2 . A6 அரைப்பக்க விளம்பரம் — £100 .00

3 . A7 கால்பக்க விளம்பரம் — £75 .00

4 . முன் அட்டை உள்பக்க விளம்பரம் — £400 .00

5 . பின் அட்டை பின்பக்க விளம்பரம் — £500 .00

6 . பின் அட்டை உள்பக்க விளம்பரம் — £400 .00

வர்த்தக விளம்பர தொடர்புகளுக்கு —

மேலும் இம்மலர் வெளியீட்டு மூலம் எமது காரை இளையோருக்கான ஒரு போட்டியும் உண்டு,

”காரை நூற்றாண்டு 2024 ” மலருக்கான முன் அட்டைப்பட வடிவத்தை மலருக்கு ஏற்றவாறு வடிவமைத்து தரும் இளையோருக்கு தகுந்த பரிசுடன், மலர் வெளியீடு அன்று கெளரவிக்கப்படுவார், அத்துடன் இவரது புகைப்படத்துடன் ” இந்த மலரின் முக அட்டை வடிவமைப்பு” என்று பெயரும் பதிவு செய்யப்படும்.

மலருக்கான முன் அட்டை வடிவமைப்பு போட்டி விதிமுறைகள் :-

1 ) புலத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் வாழும் 24 வயதிற்கு உட்பட்ட காரைநகரைச் சேர்ந்த இளையோர்கள் பங்கேற்கலாம்.

2 ) உங்கள் அட்டைப்பட வடிவங்கள் வரும் 29 /02 /2024 க்கு முன்பதாக

karai100kws@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். மலர் வெளியீட்டு குழுவினர் தகுந்த அட்டைப்பட வடிவத்தை தெரிவு செய்து அறிவிப்பார்கள்.

3 ) உங்கள் அட்டைப்பட வடிவத்தை எமது மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு உங்கள் வயதெல்லையை குறிப்பிடும் ஆவணம் ஒன்றுடன் அனுப்பிவைத்தல் வேண்டும்.

மலரின் முன்பக்க அட்டை வடிவம் உள்ளடக்கியிருக்க வேண்டிய விடயங்கள் –

1 ) எமது ஊரின் மூன்று நில அடையாளங்கள்,

2 ) காரைதீவு நகராவதற்கு முன்னர் இருந்திருக்க கூடிய வாழ்க்கை முறைகளை சித்தரிக்கும் சித்திரங்கள். ( உங்கள் கற்பனைக்கு எட்டியவை)

3 ) காரைநகரானதின் பின்னர் அமைந்துள்ள முன்னேற்றங்கள் (கல்விக் கூடங்கள், வீதியமைப்புகள், பிற கட்டிட வடிவமைப்புகள், வாழ்க்கைமுறை மாற்றங்கள் …..என்பன போன்றவற்றை சித்தரிக்கும் சித்திரங்கள்)

4 ) இந்த ஒரு நூற்றாண்டை கடந்த பின்னர் எதிர்காலத்தில் எமது ஊர் எப்படி மாற்றமடையலாம் என்பதை சித்தரிக்கும் சித்திரங்கள் போன்றவை எதிர்பார்க்கப்படுகின்றன.

மேலும் இம்மலர் வெளியீடு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

தவராஜா – 0044 7951950843

தர்ஷன் – 0044 7414618368

நன்றி,

வணக்கம்.

நிர்வாகம்,

பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம்.