அன்பின் பிரித்தானியா வாழ் காரை மக்களே,

 
எமது வருடாந்த பொங்கல் விழாவான காரை கதம்பம் 2023 நெருங்கி வருவது யாவரும் அறிந்ததே.
 
தங்கள் பிள்ளைகளின் கலை, கலாச்சார திறமைகளை காரை மக்களின் முன்னால் வெளிப்படுத்த எமது சங்கம் அமைத்துக்கொடுக்கும் மேடை இது.
 
உங்கள் பிள்ளைக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
 
எமது ஊரின், எமது நாட்டின், எமது இனத்தின் கலை, கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்துவது அதுவும் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர்களுக்கு கடத்துவது, தங்களின் தலையாய கடமை.
 
அதற்கான மேடையே, எமது காரை கதம்பம் 2023. அதுவும் பெருந்தொற்றின் காரணமாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த மேடை மீண்டும் திறக்கப்படுகிறது.
 
உங்கள் பிள்ளையை தயார்படுத்தி, உங்களுக்கான மேடையில் மேடையேற்ற தயாராகுங்கள்.
 
விண்ணப்ப படிவம், இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
 
தொடர்புகளுக்கு : 
07951 950843 (குமார்)
07590 189831 (ஜீவன்)
07944 232014 (நாதன்)
07538 092227 (நடா)
07365 143130 (சிவா)
 
நன்றி
 
நிர்வாகம்
பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கம்
நினைவுகள்


குறிப்பு :

பிரித்தானிய வாழ் காரைநகர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதற்கான விண்ணப்ப முடிவுத் திகதியானது 15 – 01 – 2023 வரை அதாவது பொங்கல் தினம்வரை நீடிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்ப முடிவுத் திகதியை கடந்துவிட்டது என மனம் தளராது, உங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

 


காரை கதம்பம் 2023
நிகழ்சிகள் பற்றிய அறிவிப்புக்கள்

வழமைபோல் எமது சங்க அங்கத்தவர்களின் பிள்ளைகள்தான் நிகழ்சிகள் செய்யலாம்.
அங்கத்தவர்கள் அல்லாதவர்கள் உங்களின் அங்கத்துவத்தை நிர்வாகத்தினருடன் பேசி உறுதிசெய்யுங்கள்.

நுழைவுக்கட்டணமாக 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, 5 பவுன்ஸ் அறவிடப்படும்.

நிகழ்வு செய்யும் ஒவ்வொருவரும் 10 பவுன்ஸ் அனுமதிக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

எமது நிகழ்சிகள் மெருகூட்டப்பட்டு இருக்கின்றன.

இறைவணக்கத்தின் பின்னர் எமது சிறார்களின் நிகழ்வுகள் நடைபெறும்.

இடையிடையே, எமது நிகழ்வில் பார்வையாளர்களாக இருப்பவர்களையும், உள்ளெடுத்து, விவாத நிகழ்வுகள் இடம்பெறும்.

எமது பிரதம விருந்தினராக வைத்தியர் நவநீதன் அவர்கள் எமது விழாவினை அலங்கரிப்பார்கள்.

விருந்தினர் கௌரவிப்பு, பரிசில் வழங்கல் என்பவற்றை தொடர்ந்து,
காரைநகரை சேர்ந்தவர்களையும் உள்ளடக்கிய நாடக குழுவினரான மஞ்சுளா மயில்வாகனன், புவனா கணேஷ், மற்றும் ராஜேஷ் பாலகுமாரன் என்போரின் நடிப்பில் ‘கொரானாவும் வாழ்க்கையும்” எனும் நாடகம் அரங்கேற இருக்கிறது.

இவை யாவும் உங்களுக்காக, எனவே தவறாது 28.01.2023 அன்று எமது விழாவிற்கு 5 மணிக்கு முன்பே வந்து, கண்டு கழிக்குமாறு அனைத்து காரைநகர் மக்களையும் அழைக்கிறோம்.

நன்றி
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்


அன்பின் காரைநகர் மக்களே,

நாம் ஒழுங்கு செய்திருந்த மண்டபத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக, விழா மண்டபத்தை மாற்ற வேண்டிய சூழ்நிலை வந்துள்ளது.

பின்வரும் முகவரியில் உள்ள மண்டபத்திலேயே எமது விழா நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

Alperton Community School in Brent,

Upper School, Stanley Avenue,

Wembley, HA0 4JE

எனவே தடைப்படாமல் நடக்கும் எமது விழாவிற்கு, நீங்கள் தவறாது வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.