அன்பார்ந்த அங்கத்தவர்களுக்கு,

 

பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொங்கல் விழாவான ”காரைக்கதம்பம்” மீண்டும் புதிய உத்வேகத்துடன் புத்துயிர் பெறுகின்றது. கடந்த வருடம் கொடிய ”கொரோனா” வின் பிடியில் மன்றங்கள் மட்டுமல்ல உலகெங்கும் வாழும்மக்களும் சிக்குண்டு அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு மீண்டும் இதிலிருந்து வந்துள்ளோம்.

 

இத்தருணத்தில் மீண்டும் நாமும் புத்துணர்வுடன் எமது பொங்கல் விழாவினை 22/01/2022 சனிக்கிழமை மாலை 05:00 மணியளவில், Preston Manor School, Wembley, Carlton Avenue East, HA9 8NA எனும் இடத்தில அமைந்துள்ள மண்டபத்தில் எமது இளையோருடன் குதூகலமாக கொண்டாட தீர்க்கமாகியுள்ளது என்பது உங்கள் எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்பதில் ஐயமில்லை.

 

அங்கத்தவர்களே உங்கள் சிறார்களை இந்த ”காரைக்கதம்பம் 2022” ற்கு தயாராக்குங்கள் !!

 

மேலதிக விபரங்கள் ஒருசில நாட்களிலில்.

 

நன்றி.

 

வணக்கம்.

 

நிர்வாகம்.

 

(பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம்.)