அன்பான பிரித்தானியா வாழ் காரைநகர் மக்களே,


எமது சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தை நடத்த எமது சங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.


இடம் :

Heather Park Community Centre,

Mount Pleasant, Wembley, London,

HA0 1SH


திகதி : 08 – 12 – 2019


நேரம் : மதியம் 2.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை


எமது வருடாந்த பொதுக்கூட்டத்தில் பின்வருவன, முக்கியமாக இடம்பெற உள்ளன.

  • வருடாந்த கணக்கறிக்கை 2018/2019 சமர்ப்பிக்கப்படும்.
  • புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படும்.

அனைத்து பிரித்தானிய காரை நலன்புரிச்சங்க அங்கத்தவர்களையும், எமது வருடாந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு, எமது சங்க செயற்பாடுகளை பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


*பிரித்தானிய காரை நலன்புரிச்சங்க அங்கத்தவர் அல்லாதவர்களும் இந்த வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

ஆனால் பிரித்தானிய காரை நலன்புரிச்சங்க அங்கத்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை உண்டு.


அனைத்து பிரித்தானிய வாழ் காரை மக்களையும், எமது சங்க வருடாந்த பொது கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்து , காரைநகருக்கான எமது சேவைகளில் தங்களை இணைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


நன்றி

நிர்வாகம்

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்