எமது சங்க நிர்வாக உறுப்பினர்கள், சங்க நிர்வாக நடவடிக்கைகளில் தன்னார்வலர்களாக ஈடுபடுகிறார்கள்.

எந்தவித கொடுப்பனவுகளும் இன்றி, சங்கத்தின் நோக்கத்தை புரிந்து கொண்டு, காரைநகரில் வாழும் மக்களுக்கு சேவை செய்யவென, எமது சங்க நிர்வாக நடவடிக்கைகளில், தமது பொன்னான நேரத்தை செலவிட்டு வேலை செய்கிறார்கள்.


எமது சங்க விதிகளுக்கு உட்பட்டு, காரை மக்களுக்கு சேவை செய்வதே அவர்களின் பிரதான நோக்கமாக இருக்கிறது.


சங்கத்தின் அங்கத்தவர்கள் சங்க நிர்வாகிகளின் செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்து, எமது சங்கம் காரைநகருக்கு சேவை செய்ய உதவி செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


அதேநேரம் சங்க அங்கத்தவர்களை, பின்வருவனவற்றை செய்ய வேண்டாம் என தயவோடு கேட்டுக் கொள்கிறோம்.

  • நிர்வாக உறுப்பினர்களை மரியாதைக் குறைவாக நடாத்துதல்
  • தனிப்பட்ட தாக்குதல்களை மேற்கொள்ளுதல்
  • மிரட்டுதல்
  • வீணான வேலைகளை உருவாக்குதல் அல்லது செய்ய பணித்தல்

எமது சங்கத்தின் நன்மதிப்பு மற்றும் தக்கவைப்பு எனும் அடிப்படைகளில், எமது சங்க யாப்பில் உள்ள ஏற்பாடுகளின்படி, சங்கம் உரிய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.


எமது சங்கத்துடன் இணைந்து எமது காரை மக்களுக்கு சேவை செய்ய முன்வந்ததிற்கு, மனமார்ந்த நன்றிகள்.