பிரித்தானியா, சுவிஸ், கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்களின் பெரும் பங்களிப்புடன், நவீன 160 Slice CT Scanner தொகுதி, 2019.10.12 அன்று திறந்து வைக்கப்பட்டது.


இந்த நிதிப் பங்களிப்பில் பிரித்தானிய வாழ் புலம்பெயர் தமிழர்களின் நிதிப்பங்களிப்பு அளப்பரியது. அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.


காரைநகர் மைந்தர்களும் இந்த வைத்திய சேவையில் பங்காற்றி இருப்பது, காரைநகர் மக்களை பெருமை கொள்ள செய்கிறது.

  • திரு. சி கதிர்காமநாதன் (Platinum Donor)
  • திரு. வி நாகேந்திரன் (Silver Donor )

ஒருசில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது


யாழ் மட்டுமல்ல இது வடமாகாணத்திற்கு ஒரு வரப்பிரசாதம். இந்த மாபெரும் வைத்திய சேவையை வழங்க, நிதியுதவியை வழங்கிய அணைத்து கொடையாளிகளையும் வாழ்த்தி வணங்குகிறோம்.


மக்கள் சேவையே மகேசன் சேவை