கல்வி வளர்ச்சி அறக்கட்டளை – கிளிநொச்சி எனும் அமைப்பு, கிளிநொச்சி வைத்திய சாலை கண்சிகிச்சை பிரிவுக்கு, விசேட சத்திர சிகிச்சை மேசை மற்றும் விசேட சத்திர சிகிச்சை கதிரை என்பவற்றை நன்கொடையாக வழங்கி உதவுமாறு கேட்டுக்கொண்டது.


“உண்டியல்கள் மூலம் எமது சங்கத்தால் சேமிக்கப்படும் நிதி, இலங்கை வடமாகாணத்தின் சுகாதார சேவைகளுக்கு ஒதுக்கப்படுவது யாவரும் அறிந்ததே.”


அதற்கமைய மேற்படி கோரிக்கையும் எமது சங்கத்தால் எடுத்து ஆளப்பட்டது.


மேற்குறிப்பிடப்பட்ட விசேட சத்திர சிகிச்சை மேசை மற்றும் விசேட சத்திர சிகிச்சை கதிரை என்பவற்றுக்கு, LKR 948,750 செலவாகும் என கல்வி வளர்ச்சி அறக்கட்டளை – கிளிநொச்சி எமக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்தது.


எமது சங்கமும் அவர்களது கோரிக்கையை ஏற்று, விசேட சத்திர சிகிச்சை மேசை மற்றும் விசேட சத்திர சிகிச்சை கதிரை என்பவற்றை வாங்க தேவையான நிதியான LKR 948,750 (£ 4,221.67) வை, 27.04.2019 அன்று, கல்வி வளர்ச்சி அறக்கட்டளை – கிளிநொச்சி இற்கு அனுப்பி வைத்தது.

கல்வி வளர்ச்சி அறக்கட்டளை – கிளிநொச்சி, பணம் பெற்றதையும் உறுதிப்படுத்தியதோடு, 09.05.2019 அன்றே உபகரணங்களை வாங்க பணம் செலுத்தியது.


26.05.2019 அன்று விசேட சத்திர சிகிச்சை மேசை மற்றும் விசேட சத்திர சிகிச்சை கதிரை என்பவை, கிளிநொச்சி வைத்திய சாலை, கண் சிகிச்சை பிரிவிடம் கையளிக்கப்பட்டது.


ஒரு சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது….


இதன்மூலம் வன்னி வாழ் மக்கள், யாழ்ப்பாணம் வந்துதான் அல்லது தனியாரிடம்தான் சில கண் சத்திர சிகிச்சைகளை செய்ய வேண்டும் எனும் நிலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


இறுதிப்போரில் பாதிப்புற்ற வன்னி மக்களுக்கு சேவை செய்ய கிடைத்த வாய்ப்பை நினைத்து மனநிறைவில் எமது சங்கம்.