பிரித்தானிய காரை நலன் புரிச்சங்கத்தின் பொங்கல் விழாவான ‘காரைக் கதம்பம் 2019’ கடந்த சனிக்கிழமை மாலை (26.01.2019) மண்டபம் நிறைந்த மக்களுடன் இனிதே நிறைவேறியது.

 

விழா குறிப்பிடப்பட்டது போல் மாலை 05:௦௦ மணிக்கு சரியாக ஆரம்பமானது. விழாவிற்க்கு வருகை தந்திருந்த  திருமதி இராசநாயகம் பாலாம்பிகை மற்றும் திருமதி கலிஸ்டர் சாய்பாபா மங்கள விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர்.தொடர்ந்து திருமதி யெகதாம்பிகை ஆனந்தராசா வழங்கிய இனிய தேவாரத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

சங்கத்தின் உபசெயலாளர் வைத்தியர் ஓசினி சிவகுமார் வழங்கிய வரவேற்புரையை தொடர்ந்து சிறுவர் நிகழ்சிகள் ஆரம்பமானது. பரத நாட்டியம், இசைக் கச்சேரி, நாடகம், சினிமா நடனம், பேச்சு என்று பல இனிய நிகழ்வுகளை சிறுவர், சிறுமியர் மேடையேற்றினர்.

நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. ஐ. தி. சம்பந்தன் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.  ஊடகவியளாளர் திரு இளையதம்பி தயானந்தா திரு. ஐ. தி. சம்பந்தன் பற்றிய பெருமைகளை எடுத்துரைத்தார். மேலும் பிரித்தானிய சங்கத்தின் முன்னாள் தலைவர்கள், பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் போன்றோர் இவ்கௌரவிப்பில் கலந்து கொண்டனர். பிரதம விருந்தினர் திரு. ஐ. தி. சம்பந்தன் அவர்கள் தமது உரையில் காரை மண்ணின் பெருமைகளை எடுத்து இயம்பி, மேலும் காரை மக்கள் ஒற்றுமையாக  மேலும் காரை மண்ணை மேம்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

பிரித்தானிய நலன் புரிச்சங்கத் தலைவர் திரு. முருகேசு யோகராஜா தலைமையுரை ஆற்றும்போது, காரை மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி, காரைமக்களை காரை மண்ணை மேலும் முன்னேற்ற ஒற்றுமையுடன் கூடுமாறு அழைப்பு விடுத்தார். 

விழாவில் காரை மண்ணில் இருந்து காணொளி மூலம் திருமதி வீரமங்கை வழங்கிய சிறப்புரை ஒளிபரப்பப்பட்டது. மேலும் காரை யாழ்ரன் கல்லூரி மாணவர்கள் நடித்து வழங்கிய நாடகம் ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது.

தொடர்ந்து விழாவில் பங்குபற்றிய சிறார்களும், அண்மையில் பல்கலையில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பட்டதாரிகளும் கௌரவிக்கப்பட்டார்கள்.

சங்கத்தின்  விழா பொருளார் திரு தர்சன் இராஜேந்திரன் வழங்கிய  நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது. அதன் பின்னர் மக்கள் அனைவரும் இராப்போசன விருந்தில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.

 நன்றி 
 
நிர்வாகம்
பிரித்தானிய காரை நலன்புரிச் சங்கம்