பிரித்தானிய காரை நலன்புரி சங்கத்தின் 
காரைக்கதம்பம் 2019 
நேற்றைய தினம் (26.01.2019) இனிதே நடந்தேறியது.

இதில் 300 இற்கு மேற்பட்ட காரை மக்கள் 
பார்வையாளர்களாக வந்து இருந்தார்கள். 
மேலும் 44 காரை மைந்தர்கள் 
பல்வேறு நிகழ்சிகளில் பங்குபற்றி இருந்தார்கள்.   

விழா தொடர்பான காணொளிகளும், புகைப்படங்களும் 
மிகவிரைவில் பதிவேற்றப்பட இருக்கின்றன. 

விழா சார்பில் நன்றி சொல்லும் நேரம் இது 

விழாவிற்கு பிரதம விருந்தினராக வருகை தந்து 
விழாவை சிறப்பித்த திரு ஐ.தி. சம்பந்தன் ஐயாவே 
உமக்கு நன்றி.

விழாவில் பிரதம விருந்தினரை கௌரவித்தோரே  
உமக்கு நன்றி. 

விழாவிற்காக காரை மண்ணில் இருந்து 
சிறப்புரை ஆற்றிய 
திருமதி வீரமங்கை யோகரட்ணம் அவர்களே 
உமக்கு நன்றி.

விழாவிற்கு வாழ்த்து செய்தி அனுப்பிய 
சுவிஸ் காரை அபிவிருத்தி சபையே 
பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்கமே 
உமக்கு நன்றி.

விழாவில் நிகழ்ச்சி பல செய்து 
மகிழ்வித்த சிறார்களே 
உமக்கு நன்றி.

விழாவிற்காக சிறார்களை 
ஊக்குவித்து வழிநடத்திய பெற்றோர்களே 
உமக்கு நன்றி.

விழாவிற்காக நாடகம் ஒன்றை வழங்கிய 
காரை யாழ்ரன் கல்லூரி மாணவர்களே,
காரை யாழ்ரன் கல்லூரி நிர்வாகமே,
உமக்கு நன்றி.

விழா நடாத்த நன்கொடைகள் தந்தோரே 
உமக்கு நன்றி.

விழாவின் அனுசரணையாளர்களான 
IPOSG, PALM BEACH RESTAURANT, STAR JEWELLERS 
மற்றும் #Sydney Finance போன்றோரே 
உமக்கு நன்றி.
 
விழாவை நடாத்த ஒருங்கிணைத்து உறுதுணையாக இருந்த 
முன்னாள், இந்நாள் நிர்வாக உறுப்பினர்களே 
உமக்கு நன்றி.

விழாவை கண்டு களித்து 
எம்மை சிறப்பித்தோரே 
உமக்கு நன்றி. 

விழா நடாத்த தேவையான 
சேவைகளை தந்தோரே 
உமக்கு நன்றி.

விழா சம்பந்தமாக யாருக்கேனும் 
நன்றி சொல்லத் தவறியிருந்தால் 
பொறுத்துக் கொள்ளும் உமக்கும் நன்றி.

நிர்வாகம் 
பிரித்தானிய காரை நலன்புரி சங்கம்