பூமிப்பந்தில் பரந்து வாழும் பெருந்தன்மையுள்ள காரை மக்களே வணக்கம் …
உலகெங்கும் பரந்து வாழுகின்ற இவ்வேளையிலும்  காரை மாதாவின் கல்விப்பணியில் கருணை உள்ளம் கொண்டவர்களே, காரை இந்து மாதாவின் மடியில் கற்று, தவழ்ந்து, நடந்து, ஓடி, பாய்ந்து, துள்ளி விளையாடி, பல துறைகளிலும் சாதனைகள் படைத்து புலம் பெயர் நாடுகளில் காரை புகழ் பரப்பும் கருணை உள்ளம் கொண்டவர்களே.!!
  எமது எதிர்கால சிறார்கள் சமகால கல்வி மாற்றங்களிக்கேற்ப கல்வியினை பெற்றுக் கொள்வதிற்கு தங்களின் மேலான நிதியுதவியினை  நாடி  நிற்கின்றோம்.
அரசினால் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் அண்மித்த பாடசாலை பௌதீகவள அபிவிருத்தி திட்டத்திற்கு 230மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தை இக் கல்லூரியில் அமுல் படுத்துவதற்கு கல்லூரியை அண்டியுள்ள 48 பரப்பளவுள்ள காணி கல்லூரிக்கு உடனடியாக தேவைப்படுகின்றது.

      இதில் :- 
                  1)  6 பரப்பளவு காணி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது 
                  2)  5 1/2 (ஐந்தரை பரப்பு ) காணி கொள்வனவை கொழும்பு மற்றும் கனடா பழைய 
                      மாணவர் சங்கம் பெற்று வழங்கியுள்ளது.

மிகுதி 36 பரப்பளவு காணி கொள்வனவு செய்வதற்கான நிதியுதவி தேவைப்படுகின்றது.  மிகுதியாக கொள்வனவு செய்யப்படவேண்டிய காணிகள்  முறையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன, எனவே தங்களிடம் இக் காணிக்  கொள்வனவிற்கான தங்களின் நிதிப்பங்களிப்பினை எதிர்பார்த்து நிற்கின்றோம்.
      எங்கள் எதிர்கால சிறார்கள் சிறப்பான கல்வியைப் பெற்று நல்லதோர் சமூகம் நம் கிராமத்தில் உருவாக எமது மக்களாகிய உங்கள்  அனைவரினதும்  நிதிப்பங்களிப்பினை  பெருமனதுடன் செய்வீர்கள் என்று எதிர்பார்த்து நிற்கின்றோம்.
தங்கள் தாராள மனத்தை தயவுடன் வழங்க கீழ்வரும்  இணைப்பை அமுக்கவும்

 

   
                             ”சிறுதுளி பெருவெள்ளம்”
    தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு 
    காம்உறுவார் கற்றுஅறிந் தார்.
                                       குறள்-399
நன்றி

நிர்வாகம்
பிரித்தானியா காரை நலன் புரிச்சங்கம்.

Leave a Reply