காரைச் சங்கமம் விழாபெரும்திரளான காரைமக்கள் ஒன்று கூடலாக இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம விருந்தினராக இலங்கை வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு.ப.விக்னேஸ்வரன் தமது பாரியார் சகிதம் இலங்கையிலிருந்து வருகைதந்து கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறப்பு விருந்தினர்களாக இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த காரைநகர் ஈழத்துச்சிதம்பர அடியார்சபையின்செயலாளர் திரு.பரமேஸ்வரன் தியாகராஜா,பிரபல வர்த்தகரும் காரை அபிவிருத்திச்சபையின் நிர்வாகசபை உறுப்பினருமாகிய திரு.நேசேந்திரன் அவரது பாரியார்,டாக்டர் சிவகுமார், ஊடகவியலாளர் திரு.இளையதம்பி தயானந்தா, பிரான்ஸ் காரை நலன்புரிச் சங்க செயலாளர் திரு.தவபாலன், திரு.செல்வச்சந்திரன்(நேரு மாஸ்டர்),சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை நிர்வாக சபை உறுப்பினர்கள் திரு.லிங்கம், திரு.பாலசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

இவ்விழாவில் கல்விப்பணிப்பாளர் திரு.ப.விக்னேஸ்வரன் அவர்கள் உரையாற்றும்போது கல்வி, பாடசாலை நிர்வாகங்கள். மற்றும் பல கல்வி சம்பந்தமான ஆக்கபூர்வமான கருத்துக்களை எடுத்துக்கூறினார். மற்றும் சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றும்போது காரைநகர் அபிவிருத்தி நிலைப்பாடுகள், வெளிநாடுகளில் உள்ள சங்கங்களின் ஒத்துழைப்புக்கள் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்கள். பிரித்தானிய நலன்புரிச்சங்க தலைவர் தமத உரையில் சங்கத்தின் நேற்றைய, இன்றைய, நாளைய நிலைப்பாடுகள் பற்றி மிக அழகாக எடுத்துக்கூறினா. இந் நிலைப்பாடுகளின் நிழல் படங்களுடன் கூடிய தொகுப்புக்கள் அடங்கி செய்தித்தாள்களும் விநியோகிக்கப்பட்டன. இவ்விழாவிலிருந்து சில காட்சிகளைக் கீழே காணலாம்.