பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் 2015 …

மேற்படி மன்றத்தின் பொதுக் கூட்டம் இன்று காலை (18/10/2015)11:30மணியளவில்
17, Stonefield Close , Ruislip, London, HA4 0XT எனும் இடத்தில் அமைந்துள்ள மண்டபத்தில் சுமுகமான முறையில்  நடைபெற்றது.
திரு.K . ஒப்பிலாமணி அவர்களின்  தேவாரத்துடன் தலைவர் திரு .S .கோணேசலிங்கம் தலைமையில்  ஆரம்பமானது .  தொடர்ந்து  தலைவர் அறிக்கை, செயலாளர் அறிக்கை , பொருளாளர் அறிக்கைகள் முறையே சபையினர் முன்வைக்கப்பட்டு சபையினரால் ஆமோதிக்கபட்டது.

 

அடுத்து புதிய நிர்வாகத்தெரிவுக்காக  நிர்வாகம் உத்தியோக பூர்வமாக கலைக்கப்பட்டு மீழ் தெரிவுக்காக போஷகர் திரு.P .தவராஜா  அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, கீழ் அமைந்தவாறு நிர்வாகம் சபையினரால் தெரிவுசெய்யப்பட்டது.
அடுத்து வந்த காரைக் கண்ணோட்டத்தில், சபையினர் கேள்வி பதில் நிகழ்வில், வழமைபோல் பல காரசார விவாதங்கள் (குடி தண்ணீர் விநியோகம், பிரித்தானியாவில் எமது மன்றத்திற்கென சொந்தமாக ஒரு இடம் கொள்வனவு செய்தல், காரை தீபம் 2015– வெள்ளி விழா விமர்சனம், நூல்நிலையம் என பல) இடம்பெற்று புதிய நிர்வாகத்தினரால் ஆராயப்பட்டது .

இறுதியாக நிதி ஒதுக்கீட்டின் போது, மன்றத்தை அணுகியிருந்த மூன்று  வேண்டுகோள்கள் ஆராயப்பட்டு,அதில் இரண்டு வேலைத்திட்டங்களுக்கு1.5 மில்லியன் ரூபாய்கள் நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டது.
அவையாவன , கலாநிதி ஆ தியாகராஜா ம.ம.வித்தியாலய மைதான சுற்றுமதில் நிர்மாண வேலைகள் , மற்றும் யா/சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய மைதான புனருத்தாரணம், புதிய Photo copier equipment கொள்வனவு செய்தல் என்பனவாகும்.
புதிய நிர்வாக உறுப்பினர்கள் விபரம் பின்வருமாறு  :-

தலைவர்               —        திரு .S .கோணேசலிங்கம்
உப தலைவர்       —        திரு .V .நாகேந்திரம்
செயலாளர்           —        திரு .P.சிவானந்தராசா

உப செயலாளர்   —         திரு .S .சிவபாதசுந்தரம்
பொருளாளர்       —          திரு .B .கஜேந்திரன்
உப பொருளாளர்  —       திரு . P . ஞானாநந்தன்
நிர்வாகசபை உறுப்பினர் :-
1) Dr .K .சந்திரசேகரம்
2) திரு. T.தனபாலன்
3) திரு .S .கிருபாகரன்
4) திரு. K .விக்கினேஷ்வரன்
5) திரு .K . பாலகிருஷ்ணன்
6) திரு .S .சிவராஜா
7) திரு .V .நடராஜா

8.) திரு. R .சிவசுப்ரமணியம்

9) திரு. K .ராஜரட்ணம்
10) திரு . T.தேவானந்தம்
11) திருமதி . C .சர்வானந்தன் .

 

போஷகர் சபை உறுப்பினர்கள் 
1) திரு R .சுந்தரதாசன்
2) திரு P . தவராஜா

 

 

நன்றி,

நிர்வாகம்

பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கம்

 

 

 

[gravityform id=”2″ title=”true” description=”true”]