காரை சங்கமம் 2013 விளையாட்டு போட்டியுடன் கூடிய ஒன்றுகூடல்

பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் விளையாட்டு போட்டியுடன் கூடிய வருடாந்த ஒன்றுகூடலான காரை சங்கமம் 2013 நிகழ்வு  28-07-2013 வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நிகழ்வுகள் காலை 11:00 மணியளவில் ஆரம்பமாகின. 305 பதிவு செய்யப்பட்ட விளையாட்டு போட்டியாளர்கள் உட்பட 1200 மக்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 

மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் முனைநாள் தலைவர் திரு.நல்லதம்பி சரவணப்பெருமாள் அவர்களும், பிரான்ஸ் காரை நலன் புரிச் சங்க தலைவர் திரு S.செல்வச்சந்திரன் (நேரு மாஸ்டர் ) அவர்களும் , சிறப்பு விருந்தினர்களாக ஜெர்மனியில் இருந்து வருகை தந்திருந்த திரு K .ஆனந்தசற்குணநாதன் , திரு .V.அருள்முகன்சாஜிபாபா(காரை ஆங்கில ஆசன் திரு வியஜரத்தினம் அவர்களும் , கௌரவ விருந்தினர்களா புலவர் திருமதி பூரணம் ஏனாதிநாதன், மற்றும் இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த திரு.S.T.பரமேஸ்வரன், திரு.S. கணநாதன் , பிரான்ஸ் நலன் புரிச் சங்க உறுப்பினர் திரு.முத்துலிங்கம் ஆகியோருடன் மேலும் பல ஐரோப்பிய காரை உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் , யுவதிகள், பெரியோர்கள் என்று பலதரப்பட்ட பிருத்தானியா , மற்றும் ஐரோப்பிய வாழ் காரை உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தமை எல்லோரையும் கவர்ந்து சென்றது.

இவ்விழாவிலிருந்து சில புகைப்படங்களைக் கீழே காணலாம்