யா/வியாவில் சைவ வித்தியாலய திருத்த வேலைகள் முற்று.

 

மேற்படி பாடசாலைக்கு ஒரு சில திருத்த வேலைகளுக்கு அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க ரூபாய் 109 950 .௦௦ பாடசாலை அபிவிருத்தி சபைக்கு கடந்த ஜூன் மாதம் அனுப்பிவைக்கப்பட்டு கீழ் காணும் அந்த திருத்த வேலைகள் துரிதமாக செய்து முடிக்கப்பட்டது. திருத்த வேலைகளாவன:-

**நீண்ட காலமாக பழுதடைந்திருந்த மலசல கூடம் திருத்தியது,
**பறவைகள் இடயுறுகளை தவிர்ப்பதற்காக மேல் சீட் அட்டித்தது,
**மீழ் வர்ண பூச்சு (Re paint )

பாடசாலை அதிபர் திரு கே. சுந்தரலிங்கம் அவர்கள் தனது நேரடி கண்காணிப்பின்கீழ் இவ் திருத்த வேலைகளை மிகவும் துரிதமாக செய்து முடித்தது மட்டுமல்லாமல், அவற்றிக்கான நன்றிக் கடிதத்தையும், பற்றுச்சீட்டையும் , படங்களையும் அனுப்பிவைத்ததையிட்டு பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் அதிபர் அவர்கட்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களையும் , நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.

 

பிருத்தானிய காரை நலன் புரிச் சங்கம்