“தான் படித்தேன், தான் வாழ்ந்தேன் என இராமல் காரைநகர் மண்ணின் மக்களின் கல்வியறிவு மேம்படவேண்டும் என்பதற்காக, காரைநகரில் அமைக்கப்பட்ட நூலகத்திற்கு தான் சேகரித்து வைத்த பல்வேறு நூல்களை அன்பளிப்பு செய்தவர். அதோடு நில்லாமல் காரைநகர் நூலகத்திற்கு அனுப்பவென பல்வேறு இடங்களை நாடி, நூல்களை சேகரித்து அனுப்பியவர். காரைநகர் நூலகத்திற்கு நூல்களை அனுப்ப பலபேர் அவரைத்தான் தேடுவர்…..”

 

இப்படியான நினைவுகளை, பிரித்தானியா வாழ் காரை மக்கள் சுமந்து நிற்க, அந்நினைவுகளுக்கு சொந்தமான அமரர் அருணாச்சலம் முத்துலிங்கம் இன், மறைவை கேட்டு, உலகெங்கும் பரந்து வாழும் காரைநகர் மக்கள் மாத்திரமன்றி, தமிழ் அன்னையும் கலங்கி நிற்கிறாள்.

 

அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எமது அனுதாபத்தையும், ஆறுதல்களையும் தெரிவித்து கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஈழத்து சிதம்பர தில்லைக் கூத்தனை வேண்டி நிற்கின்றோம்.

 

“ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும் தென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே”

– திருமந்திரம்

 

பிரிவில் துயர் பகிரும்

 

 

நிர்வாகம்

பிரித்தானிய காரை நலன் புரிச்சங்கம்.