யாழ்ற்ரன் கல்லூரியின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்காய் கைகொடுப்போம்!!!

பழைய மாணவர்களே !!!! நலன் விரும்பிகளே!!!! சற்று உதவுங்கள் !!!!

எமது யாழ்ற்ரன் காணிக்கொள்வனவு நிதிகோரல்.

யாழ்ற்ரன் கல்லூரி கல்வி அமைச்சின் “அண் மித்த பாடசாலை சிறந்த பாடசாலை” (Nearest school is the best school) என்ற வேலைத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமைச்சினால் நிறுவப்படவுள்ள கட்டங்கங்களுக்கு கல்லூரியின் காணி போதாமையாகவுள்ளது.

தற்போது உள்ள காணி விளையாட்டு மைதானத்திற்கு மட்டுமே போதுமானதாகவுள்ளது, எனவே இம்மைதானத்துடன் சேர்ந்த காணிகள் 25 பரப்பு உள்ளது. இதனை கல்லூரி கொள்வனவு செய்ய வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. இக்காணிகள் வாங்காவிட்டால் அவ்வமைச்சினால் வந்த நிதி திரும்பிவிடும். எனவே இவ் 25 பரப்பு காணியைக் கொள்வனவு செய்வதற்கு ரூபாய் 2,750,000/= (ரூபாய் 27 1/2 லட்சம் ) தேவையாகவுள்ளது. எனவே இதற்கான நிதி உதவியை இலண்டன் மற்றும் இதர நாடுகளில் வாழும் யாழ்ற்ரன் கல்லூரி பழைய மாணவர்கள் அல்லது நலன் விரும்பிகள் இதற்குரிய நிதியுதவியை செய்து தருமாறு தங்களை அன்பாக வேண்டிக்கொள்கின்றோம்.

தங்கள் தாராள மனத்தை தயவுடன் வழங்க கீழ்வரும் இணைப்பை அழுத்தவும்:
https://mydonate.bt.com/events/karaiyarltoncollegeland2016

இது கல்லூரிக்கு மிகவும் அவசியமான முக்கியமான தேவை என்பதனை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நன்றி,
நிர்வாகம்
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்

Leave a Reply