ஆண்டுகள் சில கடந்தாலும் ஆழமான சிந்தனையின் அபிவிருத்திக்கான அடிக்கல் நாட்டுவிழா!!!

 

 

பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் கடந்தகால பிரமாண்ட வேலைத் திட்டங்களில் ஒன்றான ஆயுள்வேத வைத்தியசாலை நிர்மான கட்டுபணி வேலைகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (16/05/2016) ஆரம்பம்.

 

 

காரை மண்ணில் ஆயுள்வேத வைத்தியசாலை ஒன்று அமையவேண்டும் என்று பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் கடந்த 2013ம் ஆண்டு அப்போதைய காரை அபிவிருத்தி சபை நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 1.3மில்லியன் ரூபாய்கள் செலவில் களபூமியில் காணி ஒன்றினை கொள்வனவு செய்து இத் திட்டத்திற்கு   வழங்கி இருந்தது.

 

இதற்கான கட்டுமான பணிகள் நேற்றையதினம் அடிக்கல் நாட்டப்பட்டதையிட்டு பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றது.

 

 

நன்றி.

 

நிர்வாகம்

 

காரை நலன்புரிச்சங்கம் (பிரித்தானியா)

 

 

Leave a Reply