பிருத்தானிய காரைநலன்புரிச்சங்கத்தின் பொங்கல்விழாவான “காரைக் கதம்பம் 2013 ” எதிர்வரும் வருடம் மாசி மாதம் 2 ம் திகதி சனிக்கிழமை (02 /02 /2013 ) மாலை 05 : ௦0 மணிக்கு PRESTON MANNOR HIGH SCHOOL, CARLTON AVENUEEAST, WEMBLEY, HA9 8NA இல் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற உள்ளது.

 

இந்நிகழ்வில் பங்குபற்ற விரும்பும் அங்கத்தவர்களது பிள்ளைகள் தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சி விண்ணப்பபடிவத்தை பூர்த்திசெய்து 10 /01/2013 இக்கு முன்னராக படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விலாசத்திற்கு அனுப்பிவைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

அங்கத்துவம் அற்றவர்கள் நிகழ்வில் பங்குபற்ற விரும்பும் பட்சத்தில், இணைக்கப்பட்டிருக்கும் அங்கத்துவ படிவத்தையும், ஒரு வருட அங்கத்துவசந்தாவான £60.௦௦ களுக்கான காசோலையோ அல்லது வங்கி மாதாந்த செலுத்துகை விண்ணப்பபடிவத்தையும் (மாதம் தலா 5.௦௦ விகிதம்) நிகழ்ச்சிக்கான விண்ணப்பபடிவத்தையும் பூர்த்தி செய்து மேல் குறிப்பிட்ட திகதிக்கு முன்னதாக அனுப்பிவைக்குமாறு நிர்வாகத்தினர் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றனர்.

 

மேலதிக தொடர்புகளுக்கு;

 

Kumar  :- 07951 950843, Chithra:- 020 8342 0403, Manchula:- 078 2580 1801

 

நன்றி .