KWS-UK Donates Latest Books to KAS-Student Library

KWS-UK have donated 1800 books, worth 720,000/= to Karainagar student library via Sri Lanka well know book distributor “Quency”.  

These books include children storey books, text books, novels, references books, history and leisure books. All of these books have been carefully selected by the Karainagar school principals and library subcommittee.  Beyond doubt, these books will make a major impact on transformative for our Karai children at all ages.

In Oct 2013, KWS-UK has also funded to purchase library furnitures.  This makes a total donation to the KAS- student library is just over 1.0millions SLR.

We would like to thank to all our members and well-wishers who supported this great cause. We also would like thank Mr S. Kananathan, the owner of the “Quency “for his generous discounts of 30% of the retail value of the books.

 

Thanks

Karai Welfare Society – UK

காரை மாணவர் நூல் நிலையத்திற்கு நூற்றுக் கணக்கான நூல்கள் பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தினரால் அன்பளிப்பு.

பிருத்தானிய காரை நலன் புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன் , காரை மாணவர் நூல் நிலையத்திற்கு கடந்த வாரம் ருபாய் 720,361.00(ஏழு இலட்சத்து இருபதுனாயிரத்து முன்னூற்று அறுபத்து ஒரு  ரூபாய் )பெறுமதியுள்ள  சுமார் 1800 நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

 

இன் நூல்கள்  அனைத்தும் காரை இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ரன் கல்லூரி ஆசிரியர்களால் பாடத்திட்டதிற்கு அமைய   தெரிவு செய்யப்பட்டவை. இந் நூல்கள்  வருங்கால காரை மாணவர் கல்வி மேம்பாட்டுக்கு  பெரிதும் உதவும் என்பதில் ஐயம் இல்லை.

 

இந் நூல்கள் அனைத்தும் கொழும்பு ”QUENCY BOOKS  DISTRIBUTORS” உரிமையாளர் திரு . சுந்தரலிங்கம்  கணநாதன் அவர்களின் பேருதவியுடனும், பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் நீண்ட நாள் முயற்சியின் பயனாகவும் கடந்த வாரம் எமது நூலகத்தை சென்றடைந்துள்ளது. நூல்களின்  விற்பனைத் தொகை மேற்குறிப்பிட்ட 720,361.00 ரூபாய்களாக இருந்த போதும் திருவாளர் கணநாதன் அவர்கள் எமது ஊர் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு 30% விலைத்  தள்ளுபடியுடன் எமக்கு இந்நூல்களை  வழங்கி வழங்கியுள்ளார். பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் இவருக்கு எமது நன்றிகளையும் பாராடுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

  

மேற்படி நூலகத்திற்கு பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் தளபாடங்கள், நூல்கள் கொள்வனவு செய்வதற்கென 1மில்லியன் (பத்து இலட்சம்) ரூபாய்களை கடந்த வருடம் வழங்கியிருந்தது. இவ் உதவித் தொகையில் இருந்தே வழங்கப்பட்ட இந் நூல்கள், மற்றும் நூலகத்திற்கான  ஒரு பகுதி தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. 

 

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ச்சி பெற்றுவரும் எமது மாணவர் நூலகத்தை முற்று முழுதாக  பூரணப்படுத்துவதற்கு அனைத்து  புலம்பெயர் மன்றங்களும், காரை மக்களும், செல்வந்த்தர்களும், கல்விமான்களும் முன்வரவேண்டும் .

 

நன்றி

வணக்கம்

பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்