சைவ ஆசிரியர்களை தோற்றுவித்த திரு ச.அருணாசலம்  உபாத்தியாயர் (1864- 1920).
(மீழ்பதிப்பு 2015) நூல் வெளியீடு நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.

புகைப் படங்கள் உள்ளே………

 

சைவ ஆசிரியர்களை தோற்றுவித்த திரு ச.அருணாசலம்  உபாத்தியாயர் (1864- 1920).
(மீழ்பதிப்பு 2015) நூல் வெளியீடு நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.

நேற்று மாலை (22/11/2015) ஞாயிற்றுக்கிழமை ,04:30மணியளவில் ஆச்வே முருகன் ஆலய மண்டபத்தில் (ighgatehill Murugan Temple Hall, 200A Archway Rd, London N6 5BA.) இன் நூல் வெளியீடு பல அறிஞர் பெருமக்கள் மத்தியில்,120 க்கும்  மேற்பட்ட சபையோர் சூழ வெளியீடு செய்யப்பட்டது. பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கமும் , இலண்டன் திரிசக்தி இலக்கிய மன்றமும் இணைந்து இந்நூல் வெளியீட்டை ஏற்பாடு செய்திருந்தது.

நிகழ்வு  திரு இளயதம்பி தயானந்தா அவர்கள் தலைமையில், ஆசான் ச.அருணாசலம் அவர்களின் பூட்டன் திரு. சிவானந்தரட்ணம் சிவஞானேஸ்வரன்,  திருமதி ரஞ்சினிதேவி வஞானேஸ்வரன், மற்றும் பல சுமங்கலிகள் மங்கள விளக்கேற்றலுடனும் , திரு க.ஒப்பிலாமணி அவர்களின் தேவாரத்துடனும் விழா ஆரம்பமானது.

உயர்வாசற்குன்று முருகன் ஆலய சிவாச்சாரியார் அவர்கள் ஆசியுரை வழங்க,   ஆலய  கலாச்சார பிரிவு பொறுப்பாளர் திரு. மாணிக்கவாசகர் ஸ்ரீகாந்தா அவர்களும் , திரு ஐ.தி. சம்பந்தன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.

நூல் அறிமுகத்தை , நூலை மீள்பதிப்பு செய்த சைவசித்தாந்த மன்றத் தலைவர் சிவநெறிச் செல்வர் தி.விஸ்வலிங்கம் அவர்கள் செய்துவைத்தார்.  நூல் ஆய்வுரையை பேராசிரியர் மு நித்தியானந்தன்  அவர்கள் சிறப்புற ஆய்வு செய்தார்.
புதினம் பத்திரிகை ஆசிரியர் திரு இ.கே.இராஜகோபால் சிறப்புரை வழங்கியிருந்தார். நூல் முதற்பிரதியை கனகதுர்க்கை அம்மன் ஆலய அறங்காவலர் திரு.க .இரட்ணசிங்கம் அவர்கள் வெளியிட்டு வைத்தார்.

இந்த அரிய நூலை மீள்பதிப்பு செய்த கனடா சைவசித்தாந்த மன்றத்தலைவர் சிவநெறிச் செல்வர் தி.விஸ்வலிங்கம் அவர்களுக்கு  பேராசிரியர் இரட்ணம் நித்தியானந்தன் இலண்டன் திரிசக்தி இலக்கிய மன்றம் சார்பில்  ” சிவநெறிச் சாதனையாளன் ” எனும் விருதினை வழங்கி கௌரவித்தது. பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கமும் விருதினை வழங்கி திரு. திருமதி விஸ்வலிங்கத்தை கௌரவித்தனர். அத்துடன் இந்நூல் மட்டுமல்ல , இதற்கு முதல் நாம் வெளியிட்ட ”காரை மான்மியம் ” நூல் வெளிவர மிகவும் உறுதுணையும் ஒத்தாசையும் வழங்கிய திரு எஸ். கே .சதாசிவம் அவர்களுக்கான  விருதினை, திரு விஸ்வலிங்கம் அவர்களிடம் கையளித்து , வரும் மாதம் 20ம் திகதி காரைநகரில் நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டில் அவரிடம் கையளிக்கும்படி வேண்டிக்கொள்ளப்பட்டது.  இந்நூல் மீள்பதிப்பிற்கு பலவையிலும் உதவிபுரிந்த திருமதி .கிருஷ்ணவேணி சிவசோதிநாதன் அவர்களுக்கும் மன்றத்தினர் தங்கள் நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
நிகழ்வு மற்றும்பல கலை நிகழ்வுகளுடனும், இராப்போசன விருந்துடனும் இனிதே நிறைவுற்றது.
நன்றி வணக்கம்.

முதுசங்களைத்தேடி – நூல் வெளியீட்டுக் குழு
பிரித்தானியா காரை நலன் புரிச் சங்கம்.
23/11/2015