காரை இந்துக்கல்லூரி (பழைய மாணவர் சங்கம்) இற்கு காணி கொள்வனவு
மேற்படி கல்லூரிக்கு 10 பரப்பு காணி வாங்கி கொடுப்பதற்காக, நன்கொடைகள் பல்வேறுபட்ட தரப்பினரிடம் இருந்து சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.
காணி கொள்வனவிற்கான நிதியாக £21,910 (LKR 48,41,005) தொகை, 26-10-2018 அன்று அனுப்பி வைக்கபப்ட்டது.
நிதி பெற்றதாக, காரைநகர் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம், 29-10-2018 அன்று பற்றுசீட்டு வழங்கி உறுதிப்படுத்தியது.
காணி கொள்வனவின்போது எடுக்கப்பட்ட ஒருசில புகைப்படங்கள்…..
நன்னீர் – மழைநீர் சேகரிப்பு திட்டம் : வாரிவளவு பெரிய அடைப்பு நாச்சிமார் குளம்
காரைநகர் சைவமகா சபை மேற்கொண்ட வாரிவளவு பெரிய அடைப்பு நாச்சிமார்குளம் உருவாக்க செயல்திட்டத்தில், பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் பாரிய பங்களிப்பை வழங்கியது.
இத்திட்டத்தில் வேறுசில பிரித்தானிய வாழ் காரைநகரின் மைந்தர்களும் தமது தனிப்பட்ட பங்களிப்பை வழங்கியிருந்தார்கள்.
இத்திட்டத்தால்
- ஏறத்தாள 100 பரப்பில் நீர் தேக்கப்பட கூடியதாக உள்ளது.
- அமைக்கப்பட்ட குளக்கட்டுக்கள், 45 குடும்பங்கள் மாரி காலத்தில் போக்குவரத்து செய்வதற்கான பாதையாக அமைந்து விட்டது.
- ஏற்கெனவே வெள்ளப்பாதிப்புகளை ஏற்படுத்தி கடலில் வீணாக கலந்த 800 மீட்டர் நீளமான நீர்த்தேக்கத்தை அண்டிய கால்வாய் புனரமைப்பு செய்யப்பட்டது.
- நீர்த்தேக்கத்தை அண்டிய 2 கேணிகள் தூர்வாரப்பட்டது, அவையாவன கல்வந்தாழ்வு முருகன் கோவில் கேணி மற்றும் கந்தர் கேணி.
இந்த திட்டத்திற்கு, பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தால், £ 4551 (LKR 10,00,120), 12-10-2018 அன்று காரைநகர் சைவமகா சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஒரு சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன …..

அணையால் மறித்து சேமிக்கப்பட்ட, கடலை நோக்கி ஓடிவந்த மழைநீர்.
அமைக்கப்பட்ட அணையின் பாதுகாப்பு / பராமரிப்பு செயற்பாட்டில் உள்ளூர் மக்கள்.
குறிப்பு –
இதுவொரு மண்ணால் மற்றும் குறைந்த செலவில், இயற்கையோடு ஒற்றி உருவாக்கப்பட்ட அணை. வருடாந்த பராமரிப்பு இவ்வணைக்கு தேவைப்படும். ஏனெனில் பெய்யும் மழை அணையை கரைக்கக்கூடும். மற்றும் கடலை நோக்கிவரும் மழைநீர், மண்ணையும் இழுத்து வந்து அணையின் ஆழத்தை குறைக்க கூடும். காரைநகர் சைவ மகாசபை அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டது.
தில்லை மயான அபிவிருத்தி செயல்திட்டம்
காரைநகர் கிழக்கு பிரதேச மக்கள் தில்லை மயானத்தை அபிவிருத்தி செய்து தருமாறு பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தை கேட்டுக் கொண்டதற்கு அமைவாக, பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் அனுசரணையுடன் காரைநகர் பிரதேச சபை அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றி உள்ளது.
இரு உடல்கள் ஒரே நேரத்தில் தகனம் செய்யக்கூடிய தளம் அமைக்கப்பட்டு, எரி கொட்டகை போடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சமதளம் அற்ற நிலையில் காணப்பட்ட மயானம் மண் நிரப்பப்பட்டு சமதரையாக செப்பனிடப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகளை வசதியாக மேற்கொள்ளவும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் இறுதி கிரியைகள் நடைபெறும் இடத்தில் நின்று கலந்து கொள்ளவும், வாகனங்கள் தரித்து நிற்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அடித்தளம் அமைக்கப்பட்டு 100 மீற்றர் நீளமுள்ள 3 அடி உயரமான கட்டுமானத்தின் மூலம் மயானம் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. பழுதடைந்த நிலையில் இருந்த கிணறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக £ 10,000 (LKR 21,38,000) நிதியை, பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் 18.08.2018 அன்று, அனுப்பி வைத்துள்ளது. செயற்திட்டமும் இனிதே நிறைவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.




எமது உபகுழுவின் செயற்பாட்டு அறிக்கை 2016 …….
ஏற்கெனவே பிரசுரித்திருக்க வேண்டும், சில தடங்கல்களால் முடியவில்லை, அதற்காக வருந்துகிறோம்.
மரண அறிவித்தல்

திருமதி சண்முகநாதன் தவநிதி
பிறப்பு : 12.02.1984 இறப்பு : 03.08.2019
காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும் லண்டன் Wembley Alperton இல் வசித்தவருமான திருமதி சண்முகநாதன் தவநிதி அவர்கள் 03.08.2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் சண்முகநாதனின் அன்பு மனைவியும்,
நேசினி,நிரோஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கதிரவேலு மற்றும் விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான குமாரவேலு வேலுப்பிள்ளை(கு.வே) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தயாநிதியின் அன்புச் சகோதரியும்,
நேர்த்தியானந்தன்,தனபாலசுந்தரம்,லோகநாதன்,பேரின்பநாயகம்,குமாரலிங்கம்,
மோகனாம்பிகை,இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சரோஜினிதேவி,தவமலர்,சிவாம்பிகை,ராஜலட்சுமி,சிவபாதசுந்தரம்,சிவசோதி ஆகியோரின் சகலியும் ஆவார்.
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
புதன்கிழமை , 14.08.2019 10:00 AM – 4:00 PM
ASIAN FUNERAL DIRECTORS
198 Ealing Road Wembley HA0 4QG
வீட்டில் பார்வைக்கு:
வியாழக்கிழமை , 15.08.2019 7:30 AM – 8:30 AM
11 Vincent Road,Wembley, HA0 4HH.UK
கிரியை:
வியாழக்கிழமை , 15.08.2019 9:30 AM – 12:00 pm
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London, NW7 1NB, UK
தகனம்:
வியாழக்கிழமை , 15.08.2019 12:30 pm
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London, NW7 1NB, UK
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
சண்முகநாதன் (கணவர்)
தொடர்புகளுக்கு:
சண்முகநாதன் (கணவர்) (லண்டன்) + 44 7775673943
தனபாலசுந்தரம் (இலங்கை) + 94 772978388
லோகநாதன் (இலங்கை) +94 766030092
பேரின்பநாயகம் (இலங்கை) + 94 779390295
குமாரலிங்கம் (இலங்கை) + 94 773903255
தயாநிதி (இலங்கை) + 94 756533387
காரை சங்கமம் 2019
வணக்கம் காரை மக்களே,
மலரும் காரைநகர் மண்ணின் நினைவுகளுடன்……
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் கோடை கால விளையாட்டு விழாவான “காரைச் சங்கமம் 2019” இம்முறை 400 இற்கும் மேற்பட்ட காரை மக்கள் கலந்துகொண்டு வெகு விமர்சையாக 07 – 07 – 2019 அன்று நடைபெற்றது.

இவ் விளையாட்டு விழாவில் பல புதியவர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தார்கள். இம்முறை விளையாட்டு விழா ஒழுங்குகள் மிகச் சிறப்பான முறையில் செய்யப்பட்டு வெற்றிகரமாக நடாத்தி முடிக்கப்பட்டுள்ளது.




இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஊடகவியலாளர் திரு இளையதம்பி தயானந்தா பங்குபற்றி இருந்தார். மேலும் பிறநாடுகளில் வாழும் காரை மக்களும் கலந்து கொண்டனர்.


வழமை போல் எமது தாயக உணவுகள் பரிமாறப்பட்டன. குறிப்பாக இம்முறை சைவ, அசைவ கூழ்கள் மற்றும் பழஞ்சோற்றுக் கஞ்சி ஆகிய உணவுகள் மிகவும் நல்ல முறையில் மக்களின் வரவேற்பைப் பெற்றன.



கலந்து கொண்டவர்கள் இம்முறை விளையாட்டு விழா சிறப்பாக அமைந்தது என்றும் அடுத்த முறை தாம் கட்டாயமாக கலந்து கொள்வதோடு மேலும் புதியவர்களையும் வரவழைத்து சிறப்பிக்க உள்ளதாக தெரிவித்து சென்றார்கள்.


கீழே உள்ள இணைப்பை அழுத்தி இவ் விளையாட்டு விழாவிற்கான காணொளி மற்றும் புகைப்படக் காட்சிகளை பார்வையிடலாம்.
காணொளிகள்
புகைப்படங்கள் காணொளியில்……
நன்றி
நிர்வாகம்
பிரித்தானியா காரை நலன்புரிச்சங்கம்

மீள்: காரை சங்கமம் 2019 – விளையாட்டு போட்டியுடன் கூடிய ஒன்றுகூடல்
பிரித்தானிய வாழ் காரை மக்களே,
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் ஏற்பாடு செய்யும் மேற்படி ஒன்றுகூடல், காரை சங்கமம் 2019,
K Field, Kingsbury High School, Princes Ave, London NW9 9JR
எனும் இடத்திலிலுள்ள திறந்தவெளி மைதானத்தில், எதிர்வரும் 07/07/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 முதல் மாலை 18:00 வரை நடைபெறவுள்ளது என்பதை தங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
இந்நிகழ்வில் பின்வருவன உள்ளடங்களாக பல்வேறு விளையாட்டுப் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
- ஓட்டம், தடையோட்டம்,
- உதைப்பந்தாட்டம், துடுப்பாட்டம்
- சங்கீதக்கதிரை, கயிறு இழுத்தல், மற்றும் தாச்சி – கிளித்தட்டு
மேற்படி குழு விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றவிரும்புவோர், தங்கள் குழுக்களை தயாராக்கிக் கொண்டு வந்தால் சிறப்பு.
இச்சங்கமத்தில், பிரித்தானிய காரை நலன்புரிசங்க உறுப்பினர் அல்லாதோரும் பங்குபெற்றலாம் என்பதையும் அறியத்தந்து பிரித்தானிய வாழ் அனைத்து காரை மக்களையும் இந்நிகழ்வில் மகிழ்ச்சியுடன் பங்குபற்றி சிறப்பிக்குமாறு அழைகின்றோம்.
நிகழ்ச்சி உதவியாளர்களாக பணியாற்ற விரும்புவோர், மற்றும் மேலதிக விபரங்கள் தேவைப்படுவோர் கீழ்காணும் எமது சங்க உறுப்பினர்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
யோகன் – 07881650375, விக்கி – 07776303739, தர்சன் – 07414618368,
வதனா – 07450863391, அன்னம் – 07877220687, மனோ – 07859900771
07-07-2019 அன்று அனைத்து காரை மக்களையும் காலை 10:00 மணிக்கே வருகைதந்து நிகழ்வினை சிறப்புற நடாத்த உங்கள் ஒத்துழைப்பை நல்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
காரை மக்கள் சங்கமிக்கும் காரை சங்கமம் 2019 இல், அனைத்து காரை மக்களையும் தவறாது பங்குபற்றி சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
நன்றி
நிர்வாகம்.
பிரித்தானிய காரை நலன் புரிச்சங்கம்.
கண்ணீர் அஞ்சலி – அமரர் அருணாச்சலம் முத்துலிங்கம்
“தான் படித்தேன், தான் வாழ்ந்தேன் என இராமல் காரைநகர் மண்ணின் மக்களின் கல்வியறிவு மேம்படவேண்டும் என்பதற்காக, காரைநகரில் அமைக்கப்பட்ட நூலகத்திற்கு தான் சேகரித்து வைத்த பல்வேறு நூல்களை அன்பளிப்பு செய்தவர். அதோடு நில்லாமல் காரைநகர் நூலகத்திற்கு அனுப்பவென பல்வேறு இடங்களை நாடி, நூல்களை சேகரித்து அனுப்பியவர். காரைநகர் நூலகத்திற்கு நூல்களை அனுப்ப பலபேர் அவரைத்தான் தேடுவர்…..”
இப்படியான நினைவுகளை, பிரித்தானியா வாழ் காரை மக்கள் சுமந்து நிற்க, அந்நினைவுகளுக்கு சொந்தமான அமரர் அருணாச்சலம் முத்துலிங்கம் இன், மறைவை கேட்டு, உலகெங்கும் பரந்து வாழும் காரைநகர் மக்கள் மாத்திரமன்றி, தமிழ் அன்னையும் கலங்கி நிற்கிறாள்.
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எமது அனுதாபத்தையும், ஆறுதல்களையும் தெரிவித்து கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஈழத்து சிதம்பர தில்லைக் கூத்தனை வேண்டி நிற்கின்றோம்.
“ஆம்விதி நாடி அறஞ்செய்மின் அந்நிலம்
போம்விதி நாடிப் புனிதனைப் போற்றுமின்
நாம்விதி வேண்டும் தென்சொலின் மானிடர்
ஆம்விதி பெற்ற அருமைவல் லார்க்கே”
– திருமந்திரம்
பிரிவில் துயர் பகிரும்
நிர்வாகம்
பிரித்தானிய காரை நலன் புரிச்சங்கம்.
Recent Comments