எமது பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின் இவ்வாண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டம் 26/10/2014 அன்று Harrow Council மண்டபத்தில் தலைவர் ப.தவராஜா தலைமையில் கூட்டப்பட்டது. முறையே இறை வணக்கம், மௌன அஞ்சலி, மற்றும் மண்டப சுகாதார பாதுகாப்பு விதிமுறைகள்(Health & Safety instructions), பொதுக்கூட்டத்தின் மண்டப விதிமுறைகள் என்பன பண்பான முறையில் எடுத்துரைக்கப்பட்டு கூட்டம் ஆரம்பமானது.

 

ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நிகழ்ச்சி நிரலின்படி தலைமையுரை, காரியதரிசி அறிக்கை, தனாதிகாரி கணக்கறிக்கை என்பன  எந்தவித எதிர்ப்பும் இன்றி சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

அடுத்த நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கையில், “காரைக்  கண்ணோட்டம்” எனும் கருத்துப் பரிமாற்றம் நிகழ்வின்போது அங்கத்தவர்களுக்குள் ஏற்றபட்ட பலத்த இடையூறுகள் காரணமாக தலைவர் அக் கூட்டத்தை இடை நிறுத்தி ஒத்திவைத்தார்.

 

மீண்டும்  இப் பொதுக்கூட்டம் அங்கத்தவர்களுக்கு தகுந்த முறையில் அறிவிக்கப்பட்டு கடந்த 07/12/2014 அன்று 17, Stonefield Close , South Ruislip எனும் இடத்தில் உள்ள மண்டபத்தில் 35 அங்கத்தவர்கள் மத்தியில் தலைவர் ப.தவராஜா தலைமையில் ஆரம்பமானது.

கடந்த பொதுக்கூட்டத்தின் தொடர்ச்சியாக இக் கூட்டம் ஆரம்பமானது. கருத்துக்  கண்ணோட்டத்தில் எதுவித கருத்து பரிமாற்றமும் சபையினர் முன்வைக்காததை அடுத்து, புதிய நிர்வாகத் தெரிவு ஆரம்பமானது. ப.தவராஜா தலைமையிலான நிர்வாகம் உத்தியோக பூர்வமாக  கலைக்கப்பட்டு மன்றத்தின் தற்காலிக நிர்வாகப் பொறுப்பை மன்றத்தின் போஷகர்களில் ஒருவரான  திரு. R .சுந்தரதாசன் அவர்களிடம் கையளிக்கப்பட்டு, புதிய நிர்வாகத் தெரிவு ஆரம்பமானது.

 

மன்றத்தின் யாப்பின்படி நிர்வாகத்தினுள் பங்குபற்ற விரும்புவர்கள் முன்கூட்டியே தங்கள் தங்களுக்கு விருப்பமான தகுதியான பதவிகளுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும் என்பது விதிமுறை. (Agreed Proposed changes in KWS- UK constitution Auguest 2013 AGM,  clause 16-officers and trustees- sub clause 6&7)

 

தலைவர் பதவிக்கு தொடர்ந்தும் திரு ப. தவராஜாவும், செயலாளர் பதவிக்கு திரு S .சிவபாதசுந்தரம், உப செயலாளர் பதவிக்கு திரு. S .மனோகரன்,  உப பொருளாளர் பதவிக்கு திரு. பொ. ஞானனந்தன் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் பதவிக்கு 6 பேரும் விண்ணப்பித்திருந்தனர். பொருளாளர், உப தலைவர் பதவிகளுக்கு எவரும் விண்ணப்பித்திருக்கவில்லை.

 

போஷகர் புதிய நிர்வாக தெரிவின் போது அந்தந்த பதவிகளுக்கு  விண்ணப்பித்திருந்தோர் விண்ணப்பங்களை விபரித்தார். சபையில் தலைவர் பதவிக்கு தீடிரென திரு.இராமநாதன் சிவசுப்ரமணியம் அவர்கள் திரு.S .கோணேஷாலிங்கத்தை தான் தலைவராக தெரிவு செய்வதாக  முன்மொழிந்தார், இதனை திரு முருகேசு யோகராஜா வழிமொழிந்தார். இருந்தும் திரு .S கோணேஷாலிங்கம் அவர்கள் இந்தனை ஏற்க மறுத்தார். எனவே தலைவராக திரு ப.தவராஜா மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

போஷகர் உப தலைவர் பதவிக்கு ஒருவரை தெரிவு செய்யும்படி சபையினரிடம் வேண்டுகோழ் விடுக்கையில் திரு .ப . தவராஜா எழுந்து,தான் மன்றத்தின் ஒற்றுமை, மற்றும் எதிர்கால  நலன் கருதி தலைவர் பதவியை ராஜீனாமா செய்து திரு.S .கோணேஷாலிங்கத்தை தெரிவு செய்வதாக கூறி அமர்ந்தார். திரு. கோணேஷாலிங்கமும் இக்கருத்தினையே தானும் மனதில் கொண்டு இப்பதவியை ஒருமனதோடு  ஏற்பதாக ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர்  மேற்படி கூட்டம் எதுவித சலசலப்பும் இன்றி ஏனைய பதவிகள்  தெரிவு செய்யப்பட்டன. பதவி ஏற்றோர் விபரம் பின்வருமாறு :-

 

தலைவர் :- திரு .சுப்பிரமணியம் கோணேஷாலிங்கம்

உப தலைவர்  :- திரு குமாரசாமி விக்னேஸ்வரன்

செயலாளர் :- திரு .சோமசுந்தரம்  சிவபாதசுந்தரம்

உப செயலாளர்  :- திரு செல்வநாயகம்பிள்ளை மனோகரன்

பொருளாளர் :- திரு .பாலசுப்ரமணியம் கஜேந்திரன்

உப பொருளாளர்  :- திரு .பொன்னையா ஞானனந்தன்

நிர்வாகசபை உறுப்பினர்கள் ;-

1. Dr. A . நல்லைநாதன்

2. திரு.M .மகேந்திரம்

3. திரு.K .ராஜரட்ணம்

4. திரு. N . ரவீந்திரன்

5. திரு. S .கிருபாகரன்

6. திரு. S . சிவராஜா

7 திரு. K . சேந்தன்

8. திரு. P . தனபாலன்

9. திரு.M . யோகராஜா

10. திருமதி. S .சர்வானந்தன்

போஷகர் சபை:-

1. திரு ப. தவராஜா

2. திரு.வி.நாகேந்திரன்

3. திரு.இ. சுந்தரதாசன்  

 

இப் பதவிகள் தெரிவினை தொடர்ந்து, புதிய தலைவர் திரு S .கோணேஷாலிங்கம்

அவர்கள் தனது கன்னி உரையில், பதவி விலகிச் செல்லும்   தலைவர் திரு ப. தவராஜா அவர்கள் தமது தலைமைக் காலத்தில் ஆற்றிய சேவைகள் பற்றியும், அவரது நிர்வாக ஆழுமை, பெருந்தன்மை, சொந்த அர்ப்பணங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார். மேலும் அவர் தனது உரையில்  காரை மாணவர் நூலகம், மற்றும் மன்றத்தின் 25வது ஆண்டு நிறைவு விழா(2015) பற்றியும் சபையினருடன் ஆராய்ந்தார். மேலும் புதிய நிர்வாகத்தினர் சபைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டு, இப் பொதுக்கூட்டம் நிறைவுற்றது .

————————————————————————————————————————-

கடந்த ஞாயிறு (21/12/2014)நடைபெற்ற புதிய நிர்வாகத்தின் கீழான முதல் நிர்வாக சபைக்கூட்டத்தில் 15 பேர் வரை கலந்து கொண்டனர். தலைவர் திரு.S .கோணேசலிங்கம் தமது உரையில்,அடுத்த வருடம்  வெள்ளிவிழா காணவிருக்கும்  எமது பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம் ஒரு புதிய முறையில்  ” அனைத்து தலைவர்கள் கூட்டமைப்பு” என்ற ஒருமையின் கீழ் அந்த பெருவிழாவை முன்னெடுத்து செல்லும் என்று கூறினார். அதற்கு அங்கே சமூகம் அளித்திருந்த போஷகர் சபை உறுப்பினர்களான முன்னாள் தலைவர்கள் மூவரும் (திரு.R சுந்தரதாசன் , திரு V  நாகேந்திரம் , திரு P . தவராஜா )எதுவித மறுப்பும் இன்றி செவிசாய்த்தனர்.

 

இதன் பிரகாரம் கீழ்காணும் பொறுப்புக்கள் மேல்காணும் மூவரிடம் ஒப்படைக்கப்பட்டது;

 

  • திரு S  சுந்தரதாசன் அவர்கள் மன்றத்தின் புதிய  அங்கத்தவர்களை இணைத்தல் மற்றும் விழாக்களுக்கான ஒத்துழைப்பு

 

  • திரு V  நாகேந்திரம் அவர்கள் காரைநகர் சம்பந்தமான அபிவிருத்தி திட்டங்கள், செயற்பாடுகள்

 

  • திரு P தவராஜா அவர்கள் மன்றத்தின் விழாக்கள் ஒருங்கமைப்பு , இணையதள செய்தித் தொடர்பாடல்கள், மற்றும் வெளிநாட்டு சகோதர  மன்றங்களுடனான  தொடர்பு .

மேலும் வருகின்ற வருடம் ஜனவரி மாதம் 31ம் திகதி எமது பொங்கல்  விழவான ”காரைக் கதம்பம் 2015” நடைபெறவுள்ளது. இவ்விழாவின்போது எமது மன்றத்திற்கான இளையோர் அமைப்பு ஒன்றை உருவாக்கவும் நிர்வாக சபை திட்டமிட்டுள்ளது

நன்றி

வணக்கம்

நிர்வாகம் – பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம்

 

KWS-UK – AGM UPDATES & COMMITTEE MEETING 2014

The Executive committee was elected for current year;  

President – Mr S Konesalingham

Vice President Mr K Vigeswaran .

Secretary Mr S.Sivapathasuntharam

Vice Secretary – Mr S Manoharan

Treasurer Mr B. Kajandran  

Asst. Treasurer Mr P Gnanananthan

Other Trustees

1) Mr M Magendrum

2) Mr S. Sivarajah

3) Mr P  Thanabalan

4) Mrs C Saravananthan

5) Mr M Yogarajah

6) Dr A Nallanathan

7) Mr K Rajaratnam

8) Mr K Sayanthan

9) Mr S Kirubaharan

10) N. Ravendran

Partons

Mr R. Suntharathasan

Mr V. Nagendrum

Mr P Thavarajah