காரை பிருத்தானியா நலன் புரிச்சங்கம் – வருடாந்த பொதுக்கூட்டம் 2011 .

ஞாயிற்றுக்கிழமை 09/10/11 மாலை 03;30 மணியளவில் ஆரம்பமாகிய பிருத்தானிய காரை நலன் புரிச் சங்கத்தின் பொதுக் கூட்டம் 06 :30 மணிவரை நடைபெற்றது.

திரு.சு.சரவணபவான் அவர்களின் தேவாரத்துடன் கூட்டம் இனிதே ஆரம்பம் ஆனது.கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றிய தலைவர் ப.தவராஜா, வருகை தந்திருந்த உறுப்பினர்களை சங்கத்தின் சார்பில் வரவேற்றுக்கொண்டு, கடந்த எட்டு மாத காலம், காரைநகரிலும், லண்டனிலும்செய்த வேலைத் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். தொடர்ந்து செயலாளர்தனது அறிக்கையில் சங்கத்தின் வேலைத்திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்துரைத்தார். தொடர்ந்து தனாதிகாரி திரு.பொ.ஞானனந்தன் கணக்கறிக்கையை சமர்ப்பித்தார். அதில் எழுந்த வினாக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு, சபையில் கணக்கறிக்கை ஆமோதித்து வழிமொழியப்பட்டது.

தொடர்ந்து தலைவர் காரைக் கண்ணோட்டம் எனும் தலைப்பில் சங்கம் தற்பொழுது முன்னெடுத்து செல்லும் திட்டங்களில் முக்கியமாக வலந்தலை சந்தியில் அமையவிருக்கும் பேரூந்து தரிப்பு நிலையம்,தொண்டு நீச்சல் மூலம் பெறப்பட்ட நிதியில் முதல் கட்டமாக 10 பேருக்கு கண் படர் அகற்றல் சிகிச்சை அழித்து ,தொடர்ந்து மேலும் சிகிச்சை வழங்குதல். மிகுதிப்பணத்தில் வைத்தியசாலையில் செல்வி வர்ஷினி இன் பெயரால் நீண்டகால பயன்மிக்க திட்டத்தை அமுல்படுத்தல், இது பற்றிய ஆலோசனை சபையோரிடம் கேட்கப்பட்டது. அமரர்
F .X .C நடராஜா அவர்களின் ”காரை மாண்மியம்” எனும் நூலை வருகின்ற வருடம் முதல் பகுதியில் வெளியிடுதல் பற்றியும் ஆராயப்பட்டது.

வேறு விடையங்களில், காரைநகர் கிழக்கு வீதியில் அமைந்துள்ள பேரூந்து சாலைக்கு அண்மையாக,அமைப்பு சங்கத்திடம் வேண்டிக்கொண்டதன் முகமாக பத்து பரப்பு காணி ஒன்றினை கொள்வனவு செய்து கையளிப்பதன் மூலம் அரசாங்கம் குளம் ஒன்றினை வெட்டி தண்ணீரைத் தேக்குவதற்க்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் எதிர்வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக் குறையை சிறிதளவேனும் நிவர்த்தி செய்ய வழி செய்யும்.இத் திட்டம் சங்கத்தின் முன்னைநாள் செயலாளர் திரு.சிவாமகேசன் அவர்களாலும் அமைப்பினாலும் முன்மொழியப்பட்டது.

 

கேள்வி நேரத்தில் உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நிர்வாகசபை உறுப்பினர்களால் பதில் அளிக்கப்பட்டது, அத்துடன் உறுப்பினர்களின் கருத்துக்கள் நிர்வாகசபையினரின் கவனத்திற்க்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இக் கூட்டத்தில் கலந்தது கொண்ட திரு.S K .சதாசிவம் மாஸ்டர் அவர்கள் கல்வி,மருத்துவம், குடிநீர்விநியோகம் போன்ற விடையங்களில் காரைநகர் சமூகம்,புலம் பெயர் நாடுகளில் செயற்படுகின்ற காரைநகர் அமைப்புக்கள் வழங்குகின்ற காத்திரமான பங்களிப்புகள் காரணமாக காரைநகரின் கல்வியும் ஏனைய செயற்ப்பாடுகளும் உயர்நிலை அடைந்த்துள்ளதாகவும் தொடர்ந்ததும் இப்பங்களிப்புக்கள் வழங்கப்பட வேண்டுமென சங்கத்திடம் கேட்டுக்கொண்டார். அத்துடன் ஆக்கபூர்வமான கண்டனங்களை வரவேற்று ஒற்றுமையுடன் செயற்ப்பட வேண்டியது அவசியம் என்பதை சுட்டிக்காட்டினார்

தொடர்ந்து புதிய நிர்வாகசபை தெரிவில், சபையோர் தற்பொழுது உள்ள நிவாகத்தை தொடர ஏகமனதாக சம்மதம் தெரிவித்தன் மூலம் கடந்த நிர்வாக சபை சிறு பதவி மாற்றங்களுடன் மீண்டும் தெரிவாகியது.

நிர்வாகசபை உறுப்பினர்கள் விபரம் பின்வருமாறு;

தலைவர்                             திரு.ப.தவராஜா
உப தலைவர்                  திரு.க.அருட்குமரன்
செயலாளர்                        திரு.சோ.சிவபாதசுந்தரம்.
உப செயலாளர்              திரு.வி .கோணேசலிங்கம்
தனாதிகாரி                         திரு ந ரவீந்திரன்
உப தனாதிகாரி               திரு.பொ.ஞானனந்தன்

 

நிர்வாகசபை உறப்பினர்கள்
Dr. S. சபாரட்ணம்
திரு.V. நாகேந்திரன்
திரு.K.விக்னேஸ்வரன்
திரு.R.மயூரன்
திரு கஜேந்திரன்
திரு.T.ரகுபதிராஜா
திரு.T.தேவானந்தம்

திருமதி.C.சர்வானந்தன்
திரு.K.பரமேஸ்வரன்