Please download the PDF version of the letter from KAS President here

KaraiMuththamizhPeravaiLetter

நான்கு தசாப்த்தங்களுக்கு மேலாக  நற்பணியாற்றிவரும் ”களபூமி முத்தமிழ் பேரவைக்கு ” சர்வதேச ரீதியாக உதவி.
காரைநகர் களபூமி மண்ணின் பழமையானதும், பெருமைமிக்கதும், மற்றும் எமது மொழி,கலை, கலாச்சார , பண்பாட்டு விழுமியங்களை கடந்த 4தசாப்த்தங்களுக்கு மேலாக  எடுத்தியம்பி வரும் ” களபூமி முத்தமிழ் பேரவைக்கு”  காரை புலம்பெயர் மன்றங்கள் சர்வதேச ரீதியாக உதவி வழங்க உத்தேசம்.
             மேற்படி முத்தமிழ் பேரவையின் நிர்வாகி திருமதி ந.இராசமலர் அவர்களினதும், காரை அபிவிருத்தி சபைத் தலைவர் திரு.ப .விக்னேஸ்வரன்(ஓய்வுபெற்ற வடமாகான வலையக் கல்விப் பணிப்பாளர்,)  அவர்களினதும்   கடித மூலமான கோரிக்கையை அடுத்து, புலம் பெயர் மன்றங்களான பிரித்தானியா காரை நலன் புரிச்சங்கம் , கனடா காரை கலாச்சார மன்றம், சுவிஸ் காரை அபிவிருத்தி சபை ஆகியன ஒன்றுகூடி வருடாவருடம் தொடர்ந்து உதவிபுரிவதென உத்தேசித்துள்ளன.(பிரான்ஸ் காரை அபிவிருத்தி சபை மற்றும் அவுஸ்திரேலியா காரை கலாச்சார மன்றம் என்பன எதிர்காலத்தில் இணையலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது)
      1978ம்  ஆண்டுகளில் மைசூர் நடராஜா என்று காரை மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட திரு .ஆறுமுகம் நடராசா அவர்களால்  இப் பேரவை ஆரம்பிக்கப் பட்டது. தமிழ் பற்றும், சமயப்பற்றும், ஊர்பற்றும் மிக்க தயாள  குணத்தோன் திரு ஆறுமுகம் நடராசா அவர்கள்  களபூமி மண்ணுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த காரைநகரிற்கே பல பெருமைகளை தேடித்தந்தவர்.  1971ம் ஆண்டு வித்துவான் பிராங்ளின் சேல்லேரியன் செல்லையா நடராஜா அவர்களால் வெளிவந்த ”காரை மான்மியம்” நூல் வெளிவர இவரும் ஒரு காரண கர்த்தா( இன் நூலின் முதல் பதிப்பிற்கு பதிப்புரை வழங்கியுள்ளார்). கொழும்பு விவேகனந்த வீதியில் இரஞ்சனா பதிப்பகம் ஒன்றையும் நடாத்தி வந்தார்.
        தமிழன் தமிழனுடன் தமிழிலேயே பேசவேண்டும்  என்று ” தமிழ் உலகம்” எனும் அரும் பத்திரிகை ஒன்றையும் மொழி வளர்க்கும் தொலை நோக்கில் தன் சொந்த நிதியில் வெளியிட்டு வந்தார்.
முத்தமிழ் பேரவையின் கலை நிகழ்வுகளை பல இடங்களிலும் மேடையேற்றியுள்ளார். குறிப்பாக பட்டு மாமா அவர்களின் நல்லியக்க சபையில் பல தடவைகள் இந்நிகழ்வுகள் விருதுகளையும் பெற்றுள்ளது.
 காரை அபிவிருத்தி சபைத் தலைவர் திரு ப.விக்னேஸ்வரன் அவர்களது இப் பேரவைக்கான உதவிக் கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல், இப் பேரவையானது களபூமி பிரதேசத்தில் மட்டுமன்றி, காரைநகர் ரீதியாக பரந்துபட்டளவில் பாகுபாடின்றி கலை நிகழ்வுகளை முன்னெடுத்து வந்துள்ளது.
   அன்னாரின் மறைவுக்கு பின்னர்(1983ம் ஆண்டு) இவரது துணைவியார் திருமதி இராசமலர் அவர்கள் இத் தமிழ்ப் பேரவையை பல இன்னல்கள் மத்தியில் முன்னெடுத்து வருகின்றார். 1991 இடம் பெயர்வுக்கு பின்னர் 2005இல் இருந்து தனது சொந்த நிதி மூலமும், கனடாவில் உள்ள இவரது சகோதரர்களின்  உதவி மூலமும், மற்றும் ஒருசில தனிநபர் உதவிகள் மூலமும் இயக்கி வருகின்றார்.  கனடா காரை கலாச்சார மன்றமும் இக்கால முன்னேற்றத்தில் பெரிதும் உதவியுள்ளது.
   தற்பொழுது பெருகிவரும் மேலதிக தேவைகளை ஈடுகொடுப்பதற்காக எமது புலம்பெயர் மன்றங்களின்  ஆதரவையும் அனுசரனையையும் நாடி நிற்கின்றார். இவரது கைப்பட வரைந்த கோரிக்கை கடிதத்தில் தேவைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
 பழமையானதும், பெருமைமிக்கதுமான இப் பேரவைக்கு ஆதரவு வழங்க புலம் பெயர் வாழ் களபூமி மக்கள் மட்டுமன்றி அனைத்து காரை மக்களும் முன்வர வேண்டுமென்று அன்பான கோரிக்கையை நாமும் முன் வைக்கின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு :-
நாதன் – 07944 232014
குமார் – 07951 950843
சிவம் – 01908 558976.

நன்றி
வணக்கம் .
நிர்வாகம்
பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கம் .
06/11/2015

 

Leave a Reply