KARAI SANGAMAM 2015 – SPORTS DAY

Karai Welfare Society is hosting 4th summer event at Kingsbury High School Ground, Stag Lane, Kingsbury, London, NW9 9AA.

This event unites all Karainagarian who lives in UK and Europe. All Karainagarian can take part in the event.

The day about;

1)    Meeting and making new friends.

2)    Integrate our next Karai next generation.

3)    Appreciate and recognising the sport talent within our community.

4)    Encourage young and adult to participate.

 Sports- Five a side football, Six a side cricket, Races, Tug of war, and Thaichi etc.

Interest participant please contact; Mono;- 07859  900 771, Kumar;- 07951 950 843, Yogan 07881 650375Nathan – 07944232 014

காரைசங்கமம் 2015 – விளையாட்டு போட்டியுடன் கூடிய ஒன்றுகூடல்

பிருத்தானிய காரை நலன் புரிச்சங்த்தின் 4வது திறந்த வெளி மைதானத்தில் நடைபெறவுள்ள விளையாட்டு போட்டியுடன் கூடிய ஒன்றுகூடல். மேற்படி நிகழ்வு எதிர்வரும் ஜூலை (JULY ) மாதம் 12 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை    11 :00 மணியளவில் Kingsbury High School Ground, Stag Lane, Kingsbury, London, NW9 9AA எனும் இடத்தில் அமைத்துள்ள திறந்த வெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது என்பதனை தங்களுக்கு பெருமையுடன் அறியத்தருகின்றோம்

நிகழ்வில் இடம்பெறும் போட்டி விளையாட்டுக்களாவன:-

** உதை பந்தாட்டம்

** துடுப்பாட்டம் (பங்கு பற்ற விரும்புவவர்கள் தங்கள் குழுக்களை தயார் செய்து கொள்ளலாம்)

** ஓட்டம்

** தடை ஓட்டம்

** கயிறு இழுத்தல்

** தாச்சி –கிளித்தட்டு

இச்சங்கமத்தில் பிருத்தானிய காரை நலன் புரிச்சங்க உறுப்பினர்கள் அல்லாதவர்களும் சங்கமிக்கலாம் என்பதனை அறியத்தருகின்றோம். எனவே அனைத்து எம் ஊர் உறவுகளையும் முன்வந்து நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கின்றோம்.

முன்கூட்டியே நிகழ்வில் பங்கேற்க்க விரும்புவவர்கள், நிகழ்ச்சி உதவியாளர்களாக பணிபுரிய விரும்புவபர்கள் தயவுசெய்து உங்கள் பெயர்களை கீழ் குறிப்பிட்டுள்ள எங்கள் சங்க உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும்.

 முக்கிய குறிப்பு:-  அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலும் பங்குபற்றும் பிள்ளைகள் காலை 11:00 மணிக்கு முன்பதாக தங்கள் பெயர்களை மைதானத்தில் அமைக்கப்படும் காரியாலத்தில் பதிவு செய்தல் வேண்டும்.

எம் ஊர் உறவுகள் சங்கமிக்கும் அன்றைய பொன் நாளில் தங்களையும் தவறாது சமூகமளிக்குமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

மனோ – 07859 900771 , குமார் – 07951 950843 , யோகன் – 07881 650375,  நாதன் 07944 232014.

நன்றி

பிருத்தானிய காரை நலன் புரிச் சங்கம்

 

05/06/2015