காரைநகர் கிழக்கு பிரதேச மக்கள் தில்லை மயானத்தை அபிவிருத்தி செய்து தருமாறு பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தை கேட்டுக் கொண்டதற்கு அமைவாக, பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கத்தின் அனுசரணையுடன் காரைநகர் பிரதேச சபை அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றி உள்ளது.


இரு உடல்கள் ஒரே நேரத்தில் தகனம் செய்யக்கூடிய தளம் அமைக்கப்பட்டு, எரி கொட்டகை போடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சமதளம் அற்ற நிலையில் காணப்பட்ட மயானம் மண் நிரப்பப்பட்டு சமதரையாக செப்பனிடப்பட்டுள்ளது. இறுதிக் கிரியைகளை வசதியாக மேற்கொள்ளவும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் இறுதி கிரியைகள் நடைபெறும் இடத்தில் நின்று கலந்து கொள்ளவும், வாகனங்கள் தரித்து நிற்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


அடித்தளம் அமைக்கப்பட்டு 100 மீற்றர் நீளமுள்ள 3 அடி உயரமான கட்டுமானத்தின் மூலம் மயானம் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. பழுதடைந்த நிலையில் இருந்த கிணறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


இதற்காக £ 10,000 (LKR 21,38,000) நிதியை, பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம் 18.08.2018 அன்று, அனுப்பி வைத்துள்ளது. செயற்திட்டமும் இனிதே நிறைவு செய்யப்பட்டுள்ளது.


ஒரு சில புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.


சுடலை நுழைவாயில்
ஏரி கொட்டகை, எல்லைப்படுத்தப்பட்ட கட்டுமானம்
வீதி அபிவிருத்தி பணிகள்
காரைநகர் பிரதேச சபையால், அனுப்பப்பட்ட கணக்கறிக்கை.