எமது சங்கத்தில் சிறுவயது முதல் சேர்ந்து இயங்கும், எமது சங்கத்தால் “காரை கலைச்சுடர்” என கௌரவிக்கப்பட்ட, செல்வி லாவண்யா வரதராஜ் அவர்களின் மாணவிகளின் நாட்டிய நாடகம் கீழ்காணும் முகவரியில், 23.04.2023 அன்று நடக்க இருக்கிறது.

 



‘ஆறுபடை வீடு’ நிகழ்வு மூலம் சேகரிக்கப்படும் நிதியானது, எமது சங்கத்தின் ஊடாக, காரைநகர் சிறார்களின் கல்வி மேப்பாட்டுக்காக உபயோகிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 


மேலதிக விபரங்கள் (06 – 05 – 2023)……


மேற்படி நிகழ்சியின் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியாக, செல்வி லாவண்யா வரதராசாவினால் £ 500.00 எமது சங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. குறித்த நிதியினை, முன்பள்ளி மாணவர்களின் மேம்பாட்டுக்கு பயன்படுத்துமாறும் செல்வி லாவண்யா வரதராசா கேட்டுக்கொண்டுள்ளார்.

காரைநகரில் வாழும் முன்பள்ளி மாணவர்களின் மேம்பாட்டிக்கு, மேற்படி நிதியினை திரட்டி வழங்கிய, எமது சங்கத்தின் கலைச்சுடர் செல்வி லாவண்யா வரதராசா அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் செல்வி லாவண்யாவின் சேவை மேன் மேலும் சிறக்க எல்லாம் வல்ல திண்ணைபுர அம்பலத்து ஆடவல்லான் ஆசி கிடைக்க வாழ்த்துகிறோம்.

நன்றி

நிர்வாகம்
பிரித்தானிய காரை நலன்புரிச்சங்கம்