பிருத்தானிய காரை நலன்புரிச்சங்கம் மேற்படி வைத்தியசாலையில் நீண்டகாலமாக பராமரிப்புக்கு உட்படுத்தப்படாமல் இருந்த சமையல் அறையையை, சுகாதார நோக்கம் கருதி ஓரளவு பாவனைக்கு ஏற்ற வகையில் திருத்தம் செய்து கொடுக்கபட்டுள்ளது. அரசாங்க உதவி நிவாரனங்களால் ஈடு கொடுத்து நிவர்த்தி செய்ய முடியாத சில வேலைத்திட்டங்களில் இதுவும் ஒன்று. ஆகையால் இதனை நாம் நேரடியாக பார்வையிட்டபோது அதனது திருத்த வேலை எங்களால் உணர்ந்து கொள்ள கூடியதாக இருந்தது. இந்த சமையல் அறையில் இருந்துதான் நோயாளிகளுக்கான மதியபோசனம் தினமும் தயார் செய்யப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இதனது அத்தியாவசியத்தை புரிந்து கொண்ட நாம் இதை பொறுப்பேற்று நிறைவேற்றி உள்ளோம்.

 

திருத்த வேலைகள் கீழ்வருமாறு;

 

சமையல் அறை நிலம் கொத்தி புதிதாக அமைத்தது (Floor resurfacing)

 

புகைக்கூடு உட்பட சுவர்கள் சுரண்டி புதிய பூச்சு பூசியது (Chimney cleaning and painting)

 

புதிதாக சீலிங் அமைத்தது(New ceiling), புதிதாக பாத்திரங்கள் வைத்து பாது காப்பதற்கான அலுமாரி (Kitchen cupboard)

 

யன்னல் திருத்தி நெட் அடித்து கொடுத்தது (Window repair and installed net).

 

இவற்றிற்க்கான செலவு அண்ணளவாக £400. இவ் வேலைகள் அனைத்தும் எங்கள் நிர்வாகசபை உறுப்பினர்களின் மேற்பார்வையில் கடந்த மாதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது